‘நான் செத்துவிட்டேன் என்று யாராவது சொன்னால் கூட செய்தியாக போடுவீர்களா?’

‘மோடி - அமீத்ஷாவை ரஜினிகாந்த் கிருஷ்ணர் - அர்ஜூனர் என்று கூறியது பழைய கதை. இது மகாபாரத காலம் இல்லை. அரசியல் மாறிவிட்டது. இதுநவீன யுகம்’ என்று திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
 | 

‘நான் செத்துவிட்டேன் என்று யாராவது சொன்னால் கூட செய்தியாக போடுவீர்களா?’

‘மோடி - அமீத்ஷாவை ரஜினிகாந்த் கிருஷ்ணர் - அர்ஜூனர் என்று கூறியது பழைய கதை. இது மகாபாரத காலம் இல்லை. அரசியல் மாறிவிட்டது. இதுநவீன யுகம்’ என்று திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசருக்கு, திருச்சியில் அலுவலகமோ, வீடோ இல்லை என, கடந்த சில நாட்களுக்கு முன் சில அமைப்புகள் சேர்ந்து, “திருச்சி எம்.பி., திருநாவுக்கரசரை காணவில்லை”என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில், இன்று காலை திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பால பணிகளை திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன்பின் அவர் அளித்த பேட்டியில், ‘நான், 40 ஆண்டுக்காலமாக அரசியலில் இருக்கிறேன். தமிழகத்தில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் நானும் ஒருவன். என்னை காணவில்லை என்று சிலர் புகார் கொடுத்தால், அதை செய்தியாக போடுவதா? நான் செத்துவிட்டேன் என்று யாராவது சொன்னால் கூட செய்தியாக போடுவீர்களா?

நான் தொடர்ச்சியாக மக்கள் பணியில் தான் இருக்கிறேன். இரண்டொரு நாளில் திருச்சியில் அலுவலகம் திறக்கிறேன்’ என்று கொதிப்புடன் கூறினார்.

மேலும், ‘கடந்த, 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள, திருச்சி ரயில்வே மேம்பாலத்திற்கு, பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடத்தை பெற, அதற்கு இணையான இடத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். உடனடியாக மாற்று இடத்தை வழங்க வேண்டி, தமிழக முதலமைச்சர், வருவாய் துறை அமைச்சரை நேரில் சந்திக்க உள்ளேன்’ என்றார்.

பிரதமர் மோடிக்கு ஆதரவாக ப.சிதம்பரம் கூறிய கருத்தும், இதனால், ப.சிதம்பரத்துக்கு எதிராக முத்தரசன் கூறிய கருத்தும் அவரவர்களுடையது. இதனால் திமுக கூட்டணியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், மோடி - அமீத்ஷாவை ரஜினிகாந்த் கிருஷ்ணர் - அர்ஜூனர் என்று கூறியது பழைய கதை. இது மகாபாரத காலம் இல்லை. அரசியல் மாறிவிட்டது. இதுநவீன யுகம் எனவும் திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP