இபிஎஸ் விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவார் : ஸ்டாலின் கொக்கரிப்பு

நடிகர், நடிகைகளுக்கு மட்டும் மோடி பிரதமர் அல்ல; பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கும் அவர்தான் பிரதமர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 | 

இபிஎஸ் விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவார் : ஸ்டாலின் கொக்கரிப்பு

 வருகின்ற 23 -ஆம் தேதிக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அதிமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், சூலூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து, சுல்தான்பேட்டையில் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உரிய உத்தரவை வழங்கியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் உயர்மின் கோபுரங்கள் மாற்றுப் பாதையில் அமைக்கப்படும்’ என்றார்.

மேலும், "வரும் 23 -ஆம் தேதிக்கு பிறகு ( மே 23) மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும். அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்" என்றும் ஸ்டாலின் கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP