மே 1-ந்தேதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி !

நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மே 1-ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளார்.
 | 

அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மே 19-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மே 1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை அதிமுக. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, மே 1-ந் தேதி - சூலூர் தொகுதியில் மே 1 மற்றும் 14ஆம் தேதியும்,  அரவக்குறிச்சி தொகுதியில் மே5 மற்றும் 13ஆம் தேதியும், திருப்பரங்குன்றம் தொகுதியில் மே 6 மற்றும் 11ஆம் தேதியும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் மே 7 மற்றும் 12ஆம் தேதியும் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP