Logo

அ.தி.மு.க-வில் ஈகோ யுத்தம்... அலறும் அதிகாரிகள்!

திருச்சியில் அ.தி.மு.கவைச் சேர்ந்த மாவட்டச் செயலாளருக்கும், அமைச்சர்களுக்கும் எழுந்துள்ள ஈகோ மோதலால் அரசு விழாக்கள் அனைத்தும் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 | 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது திருச்சி மாவட்டத்திற்கு அமைச்சராக பூனாட்சியும், அரசு கொறடாவாக மனோகரனும் இருந்தனர். தற்போது முதல்வர்  எடப்பாடி ஆட்சியில் சிட்டிக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் உள்ளனர். மறைந்த ஜெயலலிதா ஆட்சியில் இல்லாத சூழ்நிலை, தற்போது வேறு மாதிரி உள்ளதாக  அதிகாரிகள் அவர்களுக்குள் புலம்புகிறார்களாம். வாரத்தில் 5 நாட்கள் சிட்டி அமைச்சர்கள் 2 பேரும் சென்னையில் இருக்க வேண்டியிருப்பதால் சனி, ஞாயிற்றுகிழமைகளில் திருச்சியில்  நடைபெறக்கூடிய மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கமாக இருந்ததாம்.

அ.தி.மு.க-வில் ஈகோ யுத்தம்... அலறும் அதிகாரிகள்!

ஆனால், திருச்சியில் பல மாதங்களாக சிட்டி அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளோ அல்லது நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளோ இதுவரை நடைபெற வில்லையாம். அதிமுக மாவட்ட  செயலாளராக எம்.பி., குமார் வந்த பின்னர், சிட்டி அமைச்சர்களான  வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறி விட்டதாகக் கூறுகிறார்கள்.

அ.தி.மு.க-வில் ஈகோ யுத்தம்... அலறும் அதிகாரிகள்!

தங்களுக்கு சொந்தமான வேலைகள் இருப்பதால் காலையில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது. மதியத்திற்கு மேல் தான் நடத்த வேண்டும் என பிரச்னை செய்வதே இந்த இரு அமைச்சர்களின்  வழக்கமாக உள்ளதாக மாவட்ட அதிகாரிகள் அதிருப்தியாகி வருகிறார்கள். மாநகராட்சி நிகழ்ச்சிகளாக இருந்தாலும், மாவட்ட நிகழ்ச்சிகளாக இருந்தாலும் தலைமை, முன்னிலை என அமைச்சர் வெல்லமண்டிக்கும், எம்.பி.,குமாருக்கும் இடையே ஈகோ யுத்தம் நடந்து வருகிறது.

அ.தி.மு.க-வில் ஈகோ யுத்தம்... அலறும் அதிகாரிகள்!

‘திருச்சியில் எந்த நிகழ்ச்சிகள் இருந்தாலும் அமைச்சர்களை கேட்டு கொள்ளுங்கள்.. அழைப்பு கொடுத்தால் வருகிறேன்’ என்கிறாராம் மாவட்ட செயலாளரான எம்.பி குமார். முதலில் மாவட்டமா..? அமைச்சரா..? என இவர்களுக்கு இடையே ஈகோ இருப்பதால்தான் திருச்சியில் பல மாதங்களாக நடைபெறாமல் அரசு விழாக்கள் தள்ளிக் கொண்டே போவதாக அரசு  அதிகாரிகள் மட்டத்தில் பரவலாக பேசப்படுகிறது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP