திமுகவிற்குள் பூகம்பம் வெடிக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவிற்குள் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

திமுகவிற்குள் பூகம்பம் வெடிக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவிற்குள் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘திமுகவிற்குள் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது; மு.க.ஸ்டாலின் மனக்குழப்பத்தில் உள்ளார். உதயநிதியை முன்னிலைப்படுத்தியதால் வேலூரில் வெற்றி பெற்றதாக திமுகவினர் கூறினர். 2 தொகுதி இடைத்தேர்தல் முடிவில் திமுகவினரால் ஏன் அப்படி கூற முடியவில்லை?. மிசா காலத்தில் கைதான ஸ்டாலினின் பெயர் 2 விசாரணை ஆணையத்திலும் இல்லை. ஸ்டாலின் எந்த விவகாரத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பதை அவர் சொல்ல வேண்டும்’ என்றார்.

மேலும், நெஞ்சை நிமிர்த்தி நேர்கொண்ட பார்வையாக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP