கதவை சாத்திய தி.மு.க... அன்புமணியுடன்- திருமாவளவனை இணைக்கும் டி.டி.வி.தினகரன்!

பா.ம.க., தி.மு.க கூட்டணியில் ஐக்கியமாக காய் நகர்த்தி வந்தது. அது பலிக்காததால் இப்போது டி.டி.வி.தினகரனுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க பாமக முயன்று வருகிறது.
 | 

கதவை சாத்திய தி.மு.க... அன்புமணியுடன்- திருமாவளவனை இணைக்கும் டி.டி.வி.தினகரன்!

அ.தி.மு.க-வுடன் கூட்டணி போட்டால் தோல்வியே மிஞ்சும் என நினைக்கும் பா.ம.க., தி.மு.க கூட்டணியில் ஐக்கியமாக காய் நகர்த்தி வந்தது. அது பலிக்காததால் இப்போது டி.டி.வி.தினகரனுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க பாமக முயன்று வருகிறது. 

பா.ம.க-வின் விருப்பத்தை தி.மு.க-வின் செயற்குழு கூட்டத்தில் வடமாவட்ட திமுக செயலாளர்கள் கூறி ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது, பாமகவுடன் கூட்டணி வேண்டும் என சிலரும், சேர்த்துக் கொள்ள வேண்டாம் என வேறு சிலரும் கருத்து கூறியிருக்கிறார்கள். ஸ்டாலின் தலையிட்டு தேர்தல் நெருங்கும்போது இது பற்றி பேசிக் கொள்ளலாம் என அப்போது அந்தப் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தார். 
இப்போது அதற்கான நேரம் வந்தாகி விட்டது. திமுக தம்மை கூட்டணிக்கு அழைக்கும் எனக் காத்திருந்த பாமக இப்போது அந்த நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கிறது.

 கதவை சாத்திய தி.மு.க... அன்புமணியுடன்- திருமாவளவனை இணைக்கும் டி.டி.வி.தினகரன்!

இதுநாள் வரை நட்புக் கட்சிகளாக இருந்து வந்த விடுதலை சிறுத்தைகள், மதிமுகவை கூட்டணிக்காக அலாட விடும் ஸ்டாலின் தமது கட்சியை நிராகரிப்பார் என முடிவுக்கு வந்துள்ளது. இதையும் மீறி வழியச் சென்று கூட்டணி பேசினால் எந்தப் பலனுக் கிடைக்கப்போவதில்லை என்பது ராமதாஸ், அன்புமணியின் எண்ணம். 

கடந்த முறை முதல்வர் வேட்பாளராக தனித்து நின்று பெரும் தோல்வியை தழுவியதும் அவர்களுக்கு உறுத்தலாகவே இருக்கிறது. ஆக கூட்டணி அவசியமாக இருக்கிறது. ஆனாலும் தி.மு.க- அதிமுக கூட்டணிக்கு இணையான கூட்டணியாக து இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஏற்கெனவே அப்படி ஒரு கூட்டணி உருவாகும் நிலை இருந்தது. ஆனால், திமுக கூட்டணியில் தமக்கு இடமுண்டு என நினைத்து ஒதுக்கியதே பா.ம.க தான். டி.டி.வி.தினகரன், கமல், பாமக, விடுதலை சிறுத்தைகள் என என வலுவான கூட்டணியை அமைக்க அப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் ஆட்சி உருவாகும் போது மத்திய அமைச்சர் பதவியை கேட்டு வாங்கி விடலாம் என நினைத்து அன்புமணி தயக்கம் காட்டியதால் அந்தக் கூட்டணி முயற்சி அப்போது கைவிடப்பட்டது. மீண்டும் அதே கூட்டணிக்கு முயற்சிகள் நடப்பதாக கூறுகிறார்கள் பா.ம.கவினர். 

கதவை சாத்திய தி.மு.க... அன்புமணியுடன்- திருமாவளவனை இணைக்கும் டி.டி.வி.தினகரன்!

இதுகுறித்து அக்கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர், ‘’அ.தி.மு.க- தி.மு.கவிற்கு மாற்றான சக்தியாக மற்றொரு கூட்டணியை அமமுக, பா.ம.க உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் அனைவரையும் அனுசரித்துப் போகக் கூடியவராக இருக்கிறார். கமல் ஹாசன், அன்புமணி, திருமாவளவனுக்கும் டி.டி.வி.தினகரனின் செயல்பாடுகள் திருப்தியாக இருக்கிறது. தென்மாவட்டங்களில் அமமுகவுக்கும், வடமாவட்டங்களில் பாமவுக்கும் செல்வாக்கு இருக்கிறது. இந்தக் கூட்டணிக்கு எந்தக் கட்சி தலைமை என்பதை எல்லாம் அடுத்த கட்டமாக பேசி கொள்வோம். இப்போதைக்கு இப்படி ஒரு கூட்டணி அவசியம் என நினைக்கிறோம். இதுகுறித்து தினகரன் தரப்பு அன்புமணி ராமதாஸை சந்தித்து இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை முடித்து விட்டனர். விரைவில் இந்த கூட்டணியில் இணையவுள்ள கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளிவரும்’’ என்கிறார்.    

பா.ம.க இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இணைய ஒப்புக்கொள்ளுமா? என அவரிடம் கேட்டோம். முன்பே அவர்களுடன் இணைந்து தேர்தல்களை சந்தித்து இருக்கிறோம். மருத்துவர் ராமதாஸ் ஐயாவுடன் அவர் நட்பாக இருந்துள்ளார். இடையில் ஏற்பட்ட சில சம்பவங்களால் இரு கட்சிகளும் எதிரி கட்சிகளைப் போன்ற பிம்பம் ஏற்பட்டு விட்டது. பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகளும் மட்டுமே இந்தக் கூட்டணியில் இல்லை. பல கட்சிகள் சேர்ந்ததுதான் இந்தக் கூட்டணி. பாமக அங்கம் வகிக்கப்போகும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அங்கம் வகிக்கப்போகிறது அவ்வளவுதான். இதில் பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை’’ என்கிறார் அவர். 

கதவை சாத்திய தி.மு.க... அன்புமணியுடன்- திருமாவளவனை இணைக்கும் டி.டி.வி.தினகரன்!

டி.டி.வி.தினகரனும், அன்புமணி ராமதாஸும் முதல்வர் கனவில் இருக்கின்றனர். கமலஹாசனுக்கும் அப்படி ஒரு எண்ணம் உள்ளுக்குள் ஆட்டிப்படைப்பதாக கூறுகின்றனர். பா.ம.கவுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் ஏற்கெனவே வாய்க்கால் சண்டை வேறு. இந்த நிலையில் இப்படி ஒரு கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறுகின்றனர். இது வெறும் பேச்சுவார்த்தையோடு முடிந்து போகுமா? அல்லது கூட்டணியாக உருவெடுத்து தேர்தலை சந்திக்குமா என்பது அவர்களது ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை சந்திப்புகளிலேயே வெளிப்பட்டு விடும்.  

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP