ஒரு சீட்டுக்காக குடும்பத்தை விட்டுக்கொடுப்பார் என்று நினைக்கவில்லை: விஷ்ணு பிரசாத் குறித்து அன்புமணி!

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி சீட்டுக்காக குடும்பத்தை விட்டுக்கொடுப்பார் என்று நினைக்கவில்லை என தனது உறவினர் விஷ்ணு பிரசாத் குறித்து அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்தார்.
 | 

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாமக கூட்டணி குறித்து, அன்புமணியின் மைத்துனரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர்களில் ஒருவரான எம்.கே.விஷ்ணு பிரசாத், 'அதிமுக- பாமக இடையே நடைபெற்றது, கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை. அது கூட்டணி பேரம்' என்று கூறினார். 

இதுகுறித்து இன்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அன்புமணி, "முன்னதாக, திமுக தரப்பில் மற்ற கட்சிகளுக்கு அறிக்கை விட வேண்டும் என்றால் துரைமுருகன் வீர,பாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரை  வைத்துதான் விமர்சனம் செய்வார்கள், அறிக்கை விடுவார்கள். ஆனால், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று எனது உறவினர் மூலமாக எனக்கு அறிக்கை விடுகிறார். 

விஷ்ணு பிரசாத் எனது உறவினர். எனது மனைவியின் சகோதரர். அவர் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி சீட்டுக்காக குடும்பத்தை விட்டுக்கொடுப்பார் என்று நினைக்கவில்லை. எனக்கும் சரி, எனது மனைவிக்கும் இந்த விஷயத்தில் மிகவும் வருத்தமுற்றோம். 

எனவே இந்த விவகாரத்தில் எந்தவித கருத்தையும் நான் கூற விரும்பவில்லை. எந்தவித விமர்சனத்தையும் முன்வைக்கப் போவதில்லை ஏனென்றால், இதற்காக திமுக தரப்பில் அவருக்கு சீட் கிடைக்கலாம்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP