ஓபிஎஸ் வாரணாசி சென்றுள்ளது ஏன் தெரியுமா? : இவர் சொல்வதை கேளுங்க...

மகனுக்கு எம்பி பதவியும், தனக்கு ஆளுநர் பதவி வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் வாரணாசி சென்றுள்ளார் என்று, அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் இன்று தெரிவித்துள்ளார்.
 | 

ஓபிஎஸ் வாரணாசி சென்றுள்ளது ஏன் தெரியுமா? : இவர் சொல்வதை கேளுங்க...

தன் மகனுக்கு எம்பி பதவியும், தமக்கு ஆளுநர் பதவியும் வேண்டும் என்பதற்காக தான், ஓபிஎஸ் வாரணாசி சென்றுள்ளார் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் இன்று தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் நடைபெற்ற பாஜக பேரணியில் ஓபிஎஸ் குடும்பத்துடன் பங்கேற்றது தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்ற அவர், ஜெயலலிதா இருந்திருந்தால் ஓபிஎஸ் இவ்வாறு வாரணாசி செல்ல முடியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், யாருக்கு உண்மையான கூட்டம் சேர்கிறது என்பது, மே மாதம் 23- ஆம் தேதிக்கு பிறகு தமிழக அமைச்சர்களுக்கு தெளிவாக தெரிந்துவிடும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP