’உங்களுக்கெல்லாம் தூக்கம் ஒரு கேடா..?’ அமைச்சர்களை அதிரவைக்கும் டெல்டாவாசிகள்!

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுகை மாவட்டங்களில் அமைச்சர்கள் சுற்றிச்சுற்றி வருகின்றனர். ஒரு சில இடங்களில் தங்கள் பகுதிக்கு ஏன் வரவில்லை என மக்கள் முற்றுகை, சாலை மறியல் நடத்தி வருகின்றனர்.
 | 

’உங்களுக்கெல்லாம் தூக்கம் ஒரு கேடா..?’ அமைச்சர்களை அதிரவைக்கும் டெல்டாவாசிகள்!

டெல்டா மாவட்டங்களில் அமைச்சர்கள் பாடு பெரும் திண்ட்டாட்டமாக இருக்கிறது. கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் களப்பணியாற்ற அமைச்சர்கள் அனைவரும் ஈடுபட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து நாகை, தஞ்சை, திருவாரூர், புதுகை மாவட்டங்களில் அமைச்சர்கள் சுற்றிச்சுற்றி வருகின்றனர்.

’உங்களுக்கெல்லாம் தூக்கம் ஒரு கேடா..?’ அமைச்சர்களை அதிரவைக்கும் டெல்டாவாசிகள்!

ஒரு சில இடங்களில் தங்கள் பகுதிக்கு ஏன் வரவில்லை என  மக்கள் முற்றுகை, சாலை மறியல் நடத்தி வருகின்றனர். இதனால், எந்த பக்கம் செல்வது என புரியாமல் அமைச்சர்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். எந்த பக்கம் போனாலும் துரத்தி நம்மள பிடிச்சிருவாங்க போலிருக்கே என்று ஓட்டம் பிடிக்கின்றனர். இதில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு பால்வளத்துறை அமைச்சர் டி.கே.ராஜேந்திரபாலாஜி பொறுப்பாளராக உள்ளார். இவர் மன்னார்குடியில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்து கவனித்து வருகிறார். ஒருநாள் காலை அறையில் தூங்கி கொண்டிருந்தவர் கூட்டமாக கூச்சலிடும் சத்தம் கேட்டு பதறி அடித்து அறைக்கு வெளியே எட்டி பார்த்தார்.

’உங்களுக்கெல்லாம் தூக்கம் ஒரு கேடா..?’ அமைச்சர்களை அதிரவைக்கும் டெல்டாவாசிகள்!

அப்போது லாட்ஜ் வாசலில் காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு குடிக்க தண்ணீர் இல்லை, குடியிருக்க வீடு இல்லை, உங்களுக்கெல்லாம் தூக்கம் ஒரு கேடா என கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அப்செட்டான அமைச்சர், நான் இங்கிருப்பது மக்களுக்கு எப்படி தெரியும்? எனக் கேட்டுள்ளார். ’நம்மை போட்டு கொடுப்பதற்கென ஒரு கூட்டம் உள்ளது. நாம் தங்கியிருப்பது எதிரணியினரின்  லாட்ஜ். சூதானமா இருக்கணும்’ என கட்சியினர் கூறி இருக்கின்றனர். 

’உங்களுக்கெல்லாம் தூக்கம் ஒரு கேடா..?’ அமைச்சர்களை அதிரவைக்கும் டெல்டாவாசிகள்!

இதனால், நொந்துபோய் கிடக்கின்றனர் டெல்டா பகுதிகளில் தங்கியுள்ள அமைச்சர் பெருமக்கள்!

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP