நண்பர்களை  கஷ்டத்திலும், தலைவர்களை தேர்தல் இல்லாத நேரத்திலும் அறியல

இந்த தீபாவளி பண்டிகைக்கும் வழக்கம் போல டாஸ்மாக் தீபாவளி இலக்கு விற்பனைக்கு இலக்கு சுமார் 350 கோடி ரூபாய் நிர்ணயம் செய்துள்ளது. மக்கள் குடும்பத்தோடு மகிழ வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, அவர்கள் குடித்து கூத்தடிக்க இலக்கு நிர்ணயம் செய்கிறது.
 | 

நண்பர்களை  கஷ்டத்திலும், தலைவர்களை தேர்தல் இல்லாத நேரத்திலும் அறியலாம்!

நண்பர்களை தெரிந்து கொள்ள துன்பத்தில் அறிந்து கொள்ளலாம் என்பார்கள். அதைப் போல தலைவர்களை தேர்தல் காலத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்தல் .நேரத்தில் எல்லா தலைவர்களும் மக்களை காப்பாற்றுவதற்கு பிறந்தவர்கள் போல பேசுவார்கள். 

ஒருவரின் குற்றம், மற்றவர் மூலம் வெளிப்படும். தேர்தல் நேர்த்தில் அவர்கள் பேசுவது எதுவும் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றமாட்டார்கள். குடிகாரன் பேச்சு காற்றோடு போச்சு என்பது போல, தலைவர்கள் பேச்சு தேர்தலோடு போச்சு கதை தான். அதைத் தாண்டி சில தலைவர்கள் நம் மத்தியில் உலாவருகிறார்கள். ஆனால் அவர்களை நாம் தேர்தல் நேரத்தில் கண்டு கொள்வதே இல்லை.

அவர்களில் முக்கியமானவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணி. அவர்கள் அரசியல், கூட்டணி போன்றவற்றின் நிலைப்பாடுகளில் மாறுபாடு இருக்கலாம். ஆனால் தமிழகத்தை எந்த மாதிரி ஓராண்டு நடத்த வேண்டும் என்று ஆண்டு தோறும் மாதிரி பட்ஜெட் வெளியிடுகிறார்கள். 

அதிலும் விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் வேறு. இதைத் தவிர மது, புகையிலைக்கு எதிராக அவர்கள் நடத்தி வரும் போராட்டம் தமிழர்களை நல் வழிப்படுத்த வேண்டும் எண்ணத்தை வெளிப்படுதுகிறது.

அடுத்தது, தேமுதிக தலைவர் விஜயகாந்த். பெரும்பாலும் இவரின் கருத்துக்கள் மக்கள் நினைத்தாகவே இருக்கும். இதனால் தான் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு ஆளுமைகளுக்கு இடையில் அவர்களே பயப்படும் அளவிற்கு வளர்ச்சி அடைய முடிந்தது. 

ஆனால் தொலைக்காட்சி ஊடகங்கள் அவர்களை ஜோக்கராக காட்டி மக்களை ஏமாளிகளாக மாற்றிவிட்டார்கள். யதார்த்தவாதி வெகு ஜன விரோதி என்பதற்கு இலக்கணமாக அவரை மாற்றிவிட்டன. ஒரு சில தலைவர்கள் எளிமையின் வடிவமாக கோடி கோடியாக செலவு செய்து வெளிப்படுத்துவதை நம்பும் மக்கள். இயல்பாக இருக்கும் விஜயகாந்தை ஏற்கவில்லை. 

அவர் அரசியலைத் தாண்டி மக்களை, தமிழகத்தை நேசித்ததால் தான் மகாபலிபுரத்தில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் மோடி சந்திப்பை வரவேற்றார். பிரதமர் மோடி குப்பைகளை அகற்றியதன் நோக்கத்தை வெளிப்படுத்தாமல், குப்பை எங்கே வந்தது என்று ஆராய்ச்சி செய்த தலைவர்கள் மத்தியில் விஜயகாந்த் மட்டும் மோடி செய்ததை வரவேற்றது மட்டும் அல்லாமல், மக்கள் மகாபலிபுரத்தின் சுத்தத்தை பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த தீபாவளி பண்டிகைக்கும் வழக்கம் போல டாஸ்மாக் தீபாவளி இலக்கு விற்பனைக்கு இலக்கு சுமார் 350 கோடி ரூபாய் நிர்ணயம் செய்துள்ளது. மக்கள் குடும்பத்தோடு மகிழ வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, அவர்கள் குடித்து கூத்தடிக்க இலக்கு நிர்ணயம் செய்கிறது. 

180 மில்லி குறைந்தது ரூ. 100 என்று வைத்துக் கொண்டாலும் ரூ.600 கோடிக்கு எத்தனை லிட்டர் விற்க வேண்டும் என்பதை உணர்ந்தால் ஒரே நாளில் தமிழன் எவ்வளவு குடிக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதை ஆட்சியாளர்களும், ஆட்சிக்கு வர முயற்சி செய்பவர்களும் கண்டு கொள்ளவில்லை. 

ஆனால் தமிழகத்தில் ஒரு ஒருதலைவர்தான் தமிழன் ஒரு சொட்டு கூட மது குடிக்க கூடாது என்று கூறி உள்ளார். அவர் தான் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன்.  இது கேவலம் ஒரு தமிழர் கூட மது குடிக்க கூடாது என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

இது போன்ற தலைவர்கள் ஆதரித்தால் தான் நாடு நன்றாக இருக்கிறதோ இல்லையோ, வீடு நன்றாக இருக்க முடியும். இதற்கு வாக்காளர்களுக்கு யானை போன்ற நியாபக சக்தி இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் சாதாரண நாட்களில் தலைவர்கள் பேசுவதை கணித்து தேர்தலில் வாக்களிக்க முடியும். 

தேர்தல் நேரத்தில் கூட்டணி,வெற்றி ஒன்று  தான் லட்சியம். அதனால் எல்லா பொய்களும் அப்போது உலாவரும். இன்றைக்கு இப்படி பேசும் தலைவர்கள் கூட தங்களின் இயல்பை மறைத்துக் கொண்டு வேறு விதத்தில் பேசலாம். அதை நம்பி வாக்களிப்பவர்கள் வாழ்க்கையை இழக்க வேண்டியது தான்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP