படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா! 

உண்மையான வரலாறு படித்தால், காந்தியின் கொலைக்கு அவர் தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்வார்கள். எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எழுதிய டிரைன் டூ பாகிஸ்தான், கோட்ஷே எழுதிய நான் ஏன் காந்தியை கொன்றேன் ஆகிய 2 புத்தகங்களையும் அடுத்தடுத்து படிக்கும் போது காந்தி கொலையின் காரண, காரியங்கள் புரியும் நம்மவிதி இவை ஆங்கிலத்தில் உள்ளன.
 | 

படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா! 

தமிழகத்தில் புதிய கருத்துச் சொல்லியாக, நடிகர் சூர்யா உருவாகி உள்ளார். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாத காரணத்தாலும், இவர்கள் இடத்தை எடப்பாடி, ஸ்டாலின் நிரப்பும் அளவிற்கு இல்லை என்பதாலும் கருத்துத்சொல்லிகள் உருவாகி உள்ளனர். அவர்களில் சூர்யா முக்கியமான இடத்தை பிடிக்கிறார். 

திருச்சி ஈ.வே.ரா., கல்லுாரியில் மாணவர் பேரவை தேர்தல், பொதுத் தேர்தலுக்கு இணையாக இருக்கும். அதில் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், தேர்தலுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட வேட்பாளர் திமுகவாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்வார். தேர்தல் முடிந்து அவர் வெற்றி பெற்றால் தான், உண்மையில் எந்த கட்சியோ அதனை வெளிப்படுத்துவார். 

தேர்தலுக்கு முன்பு அதனை வெளிப்படுத்தியிருந்தால் கட்டாயம் ஓட்டு விழுந்து இருக்காது. அதனால் இந்த நாடகம். இதே நாடகத்தை சூர்யா அரங்கேற்றி உள்ளார். ஆனால் திரைப்படத்தை ஓட வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்காக சூர்யா கோட்சேவை திட்டவேண்டும், அதே நேரத்தில் ராமசாமி நாயக்கரை  துணைக்கு அழைத்துக் கொண்டால் அவரின் ஆதரவாளர்கள் இந்த படத்தை ஓட வைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் சூர்யா இருவரையும் இழுத்து பேசியுள்ளார்.

ஆனால் அவர் சரித்திரத்தை படிக்க வில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.காந்தியின் கொலை விவகாரத்தின் தொடக்கம் அல்ல, அது விவகாரத்தின் விளைவுதான். ஆங்கிலேயேர்கள், பாகிஸ்தான், இந்தியா என்று பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, காந்தி தன் பிணத்தின் மீதுதான் இது நடக்கும் என்றார். 

ஆனால் அதை அவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த சூழ்நிலையில், ராஜாஜி சரி எல்லையில் பாகிஸ்தான் செல்ல விரும்புகிறவர்களையும், அங்கிருந்து வர விரும்புகிறவர்களையும் மாற்றிக் கொள்வோம் என்று கூறுகிறார். 

ஆனால் அதை காந்தியும், நேருவும் ஏற்கவில்லை. விளைவு பாகிஸ்தானில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். லாகூரில் இருந்து வரும் ரயில் பிணங்களை மட்டுமே சுமந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் காந்தி பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுங்கள் என்று உண்ணாவிரதம் இருக்கிறார். 

நவகாளிக்கு சென்ற காந்தியால் அங்கு நடந்த கலவரத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. மற்ற காங்கிரஸ் தலைவர்கள் காந்தி மீது கொண்டிருந்த மரியாதையை அவர் தவறாக பயன்படுத்தி பாகிஸ்தான் ஆதரவாளராகவே முற்றிலும் மாறிவிட்டார். 

பாகிஸ்தானியர்கள் கொலை செய்ய வந்தால் தலையை குனிந்து நில், பெண்களை கற்பழித்தால் கண்களை மூடிக் கொள் என்று அகிம்சை போதித்து, இந்துக்களின் இம்சை அரசனாவே மாறிவிட்டார். காங்கிரஸ் கட்சியில் அவருக்கு எதிராக யாரும் கருத்து சொல்ல முடியாத நிலை, அவரும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத வரட்டு பிடிவாதம்; இந்த சூழ்நிலையில், இந்துகள் சொத்தை இழந்து, கற்பை, உயிரை இழந்து இந்தியாவிற்கு வருகிறார்கள்.

இதை காண சகிக்காத கோட்ஸே, காந்தியை சுட்டு தள்ளுகிறார். அவருக்கும் காந்தி எதிரி அல்ல, காந்தியின் வரட்டு பிடிவாதம் தான் எதிரி. 

இன்றைக்கு காந்தியை கொன்ற கோட்சே பற்றி அதிகம் பேசும் இதே தமிழ்நாட்டில் தான் இலங்கை பிரச்னையில் தலையிட்டதற்காகவும், அமைதிப்படையை அங்கு அனுப்பியதற்காகவும் ராஜீவ் காந்தியை கொன்றதை தியாகமாக பேசுகிறது. அந்த சம்பத்தில் ஈடுபட்ட 7 பேரை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறது.

கண்ணுக்கு தெரியாத இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் இங்குள்ளவர்களின் உணர்வை துாண்டும் என்றால், கண் முன்பே ஆயிரக்கணக்கான பிணங்களை பார்க்கும் நிலையில் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறுவது எந்த அளவிற்கு நியாயம்.

கோட்சே பின்னால் ஒரு அமைப்பு இருக்கிறது என்றார். அவரின் வரலாற்றை படிப்பவர்களுக்கு தெரியும் எந்த அமைப்பும் அவரின் நடவடிக்கைக்கு ஆதரவாக இல்லை என்பது தெரிய வரும். ஆர்எஸ்எஸ் கொள்கை தவறு என்றால் அதன் முகாமில் எப்படி காந்தி கலந்து கொண்டு இருப்பார்.

உண்மையான வரலாறு படித்தால், காந்தியின் கொலைக்கு அவர் தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்வார்கள். எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எழுதிய டிரைன் டூ பாகிஸ்தான், கோட்ஷே எழுதிய நான் ஏன் காந்தியை கொன்றேன் ஆகிய 2 புத்தகங்களையும் அடுத்தடுத்து படிக்கும் போது காந்தி கொலையின் காரண, காரியங்கள் புரியும் நம்மவிதி இவை ஆங்கிலத்தில் உள்ளன.

நான் ஏன் காந்தியை கொன்றேன் நுால் தமிழில் இருந்தாலும் எளிதில் கிடைக்கவில்லை. இதனால் அடித்தட்டு தமிழர்கள் இவற்றை எல்லாம் படிக்க வாய்ப்பு இல்லை. இதை மூலதனமாகக் கொண்டு தான் சூர்யா தன் படத்தை ஓட வைக்க இந்த முயற்சியை எடுத்துள்ளார். 

சர்ச்சையை கிளப்பிவிட்டால் மட்டும் திரைப்படம் ஓடி விடாது என்பதை சூர்யா புரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கை பற்றிய தன் கருத்தை சூர்யா பரவ விட்டார். இது குறித்து தமிழகத்தில் பல விவாதம் எழுந்தது. ஆனால் அதன்பின்னர் வெளியான என்ஜிகே திரைப்படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.

இதே நிலை தான் காப்பான் திரைப்படத்திற்கும் நேர்ந்தாலும் நேரலாம். அல்லது அந்த படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பிரதமர் உயிருக்கு நேரும் ஆபத்தை சூர்யா தடுத்து நிறுத்தி இருக்கலாம். படம் வெளியானதும் சூர்யா இஸ்லாமியர்களை  இழிவு படுத்தி விட்டார் என்று கமலின் விஸ்வரூபம் படம் போல சர்ச்சை எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதை தடுக்கும் நோக்கில் கூட சூர்யா இப்போது இப்படி பேசி இருக்கலாம்.

ஆனால் தமிழக மக்களை புரிந்து கொள்ளவே முடியாது. கருணாநிதி கூட என் பேச்சை கேட்க கூட்டமாக வரும் நீங்கள், ஓட்டு மட்டும் போடுவதில்லை என புலம்பினார் அல்லவா. அதே போல பல விஷயங்களில் முடிவு எடுப்பார்கள். மத்திய அரசையோ, இந்துக்களின் பாரம்பரிய, வரலாற்றையோ விமர்சனம் செய்து கொளுத்திப் போட்டால் போதும், திரையரங்கில் கூட்டம் வந்து குவியும் என்று எண்ணினால் அது தவறாகவே முடியும்.

இதனை சூர்யா மட்டும் அல்லாமல் படத்தை ஓட வைக்கும் முயற்சியில் ஈடுபடும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP