தோரணங்களுக்காக சண்டையிட்ட திமுக- விசிக தொண்டர்கள்!

பாபநாசம் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் ராமலிங்கத்திடம் விடுதலை சிறுத்தை கட்சிகளின் கொடி தோரணங்கள் இடம்பெறவில்லை என்று புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 | 

தோரணங்களுக்காக சண்டையிட்ட திமுக- விசிக தொண்டர்கள்!

பாபநாசம் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கான திமுக வேட்பாளர் ராமலிங்கத்திடம், பிரசாரம் நடைபெறும் இடங்களில் விடுதலை சிறுத்தை கட்சிகள் கொடி தோரணங்கள் இடம்பெறவில்லை என்று புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திராவிட முன்னேற்ற கழகம் அமைத்துள்ள கூட்டணியில், இந்திய தேசிய காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அனைத்துக் கட்சிகளும் அவர்கள் சார்ந்த கூட்டணிக்கு தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராமலிங்கம், அவரது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்கள் மத்தியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். 

இந்த நிலையில், பாபநாசம் சட்டமன்றத் தொகுதிகள் உட்பட்ட பகுதிகளில் இன்று காலை கோபுராஜபுரம், பெரும்மாங்குடி, கபிஸ்தலம், நக்கம்பாடி, திருவைகாவூர், ஆதனூர், பட்டவர்த்தி சுவாமிமலை, திருமண்டங்குடி, தியாக சமுத்திரம், கங்காதரபுரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று திமுக வேட்பாளற் ராமலிங்கம் தீவிர வாக்கு சேகரித்தார்.

பாபநாசத்துக்கு வருகை தந்தபோது விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் திமுக வேட்பாளர் ராமலிங்கத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி கொடிகள், தோரணங்கள் கிராமப்புற பகுதிகளில் வைக்கப்படவில்லை. ஆனால், மற்ற கூட்டணி கட்சிகளின் கொடிகள் தோரணங்கள் இடம்பெற்றிருக்கிறது என புகார் தெரிவித்தனர். 

அதுமட்டுமின்றி , இதே போன்ற நிகழ்வு ஏற்பட்டால் நாங்கள் வாக்கு சேகரிக்க செல்ல மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் ராமலிங்கத்திடம் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து கும்பகோணம் சட்டமன்ற எம்எல்ஏ அன்பழகன் மற்றும் வேட்பாளர் ராமலிங்கம் ஆகியோர் இதுபோன்ற தவறுகள் வரும் நாட்களில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்கிறேன் அனைத்து பகுதிகளிலும் கொடி தோரணங்கள் இடம்பெறும் என வாக்குறுதி அளித்ததால் விடுதலை செய்த நிர்வாகிகள் கலைந்து சென்றனர். பின்னர் சமரசம் ஏற்பட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP