’திமுக அதிமுகவுக்கு பயந்துவிட்டது’

அதிமுகவுக்கு பயந்து தான் நாங்குநேரியில் திமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
 | 

’திமுக அதிமுகவுக்கு பயந்துவிட்டது’

அதிமுகவுக்கு பயந்து தான் நாங்குநேரியில் திமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

இதையடுத்து, நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தில் நடைபெற உள்ள இரண்டு சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும், திமுகவுக்கு பயந்து தான் நாங்குநேரியில் திமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளது எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP