திமுக குடும்பம் களவாணி குடும்பம்: ஹெச்.ராஜா

'திமுக குடும்பம் என்பது களவாணி குடும்பம், தினகரன் அணி ஒரு தீயசக்தி' என்று, மதுரையில் இன்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச் ராஜா பேட்டியளித்துள்ளார்.
 | 

திமுக குடும்பம் களவாணி குடும்பம்: ஹெச்.ராஜா

'திமுக குடும்பம் என்பது களவாணி குடும்பம், தினகரன் அணி ஒரு தீயசக்தி' என்று, மதுரையில் இன்று  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா  பேட்டியளித்துள்ளார்.


மதுரை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'திமுக குடும்பமே களவாணி குடும்பம். டிடிவி தினகரன் அணி வெளிப்படையாக திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா வரை திமுக கட்சி தீயசக்தி என்பதை மக்கள் மனதில் தெளிவாக பதிவு செய்துள்ளனர். ஆகவே திமுகவோடு கைகோர்ப்போம் என்று தங்க தமிழ்ச்செல்வன் சொன்னது எம்.ஜி.ஆர்க்கும், ஜெயலலிதாவுக்கும்  நினைவுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோக செயல்' என்றார்.

மேலும், 'முதன்முதலாக சென்னை மாநகராட்சிக்கு திமுக தரப்பில் பொறுப்பேற்றபோது துப்புரவு தொழிலாளர்களின் கூலியில் முறைகேடு செய்தது திமுக தான். திமுக குடும்பம் ஒரு களவாணி குடும்பம். திமுக கட்சி என்பது விஞ்ஞான அளவிற்கு ஊழல் செய்யும் கட்சி. அப்படிப்பட்ட கட்சியோடு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கைகோர்ப்பது என்பது  தமிழக மக்களுக்கு செய்யும்ஜ் மிகப்பெரிய துரோகச் செயல் ஆகும். தினகரன் அணி என்பது ஒரு தீய சக்தி. 

நேற்றைய தினம் சிதம்பரம் பேசிய பேச்சு மிகவும் வன்மையான பேச்சு. தமிழகத்தில் திமுக வெற்றி பெறாமல் போனால் கூட இந்த ஆட்சியை கலைப்பேன் என்று அவர் கூறுவது வரைமுறை இல்லாத செயல். தமிழகத்தில் ஒரு நிலையற்ற நிலைமையை கொண்டு வருவதற்கு காங்கிரஸ் திமுக மற்றும் அமமுக செயல்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP