தி.மு.க. கூட்டணியில் குண்டு போடும் டி.டி.வி.தினரன்..!

தீபாவளியன்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவாலயத்த்தில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜனை சந்தித்துப்பேசினார். அதற்கு காரணம் டி.டி.வி.தினகரன்.
 | 

தி.மு.க. கூட்டணியில் குண்டு போடும் டி.டி.வி.தினரன்..!

கருணாநிதி  தலைவராக இருந்தபோது பொங்கல் அன்றுதான் அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் வாழ்த்து வாங்குவதற்கும், அவரிடமிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டு வாங்குவதற்கும் அலைபாய்ந்து நிற்பார்கள். தீபாவளி தினத்தில் பொதுவாகவே திமுக தலைமை அலுவலகம் விடுமுறையை போலத்தான் இருக்கும். இந்த ஆண்டு தீபாவளியன்று திடீரென திமுக தலைவர் ஸ்டாலின் அறிவாலயத்துக்கு வந்தார். சிறிது நேரத்தில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும், அக்கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான டி.கே.ரங்கராஜனும் அறிவாலயத்துக்கு வந்தார்கள். 

தி.மு.க. கூட்டணியில் குண்டு போடும் டி.டி.வி.தினரன்..!

ஸ்டாலினுடனான சந்திப்பு முடிந்ததும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மட்டும் செய்தியாளர்களைச் சந்தித்து, ‘சீதாராம் யெச்சூரி சென்னை வருகிறார். அப்போது ஸ்டாலினை சந்திக்க விரும்புகிறார். அதுபற்றி பேச வந்தோம்’ என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்ட காரணம் வேறு.

தி.மு.க. கூட்டணியில் குண்டு போடும் டி.டி.வி.தினரன்..!

ஆங்கில நாளிதழுக்கு டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டியில், ‘திமுக, பாஜக தவிர யாருடனும் நாங்கள் கூட்டணி அமைப்போம். ஏன் அது இடது சாரிகளாக இருக்கட்டும், காங்கிரசாக இருக்கட்டும், மாநிலக் கட்சிகளாக இருக்கட்டும்’ என்று கூறியிருந்தார். தினகரன் இந்தப் பேட்டியை ஸ்டாலினும் பார்த்திருக்கிறார். தலைமைக் கழக நிர்வாகிகள் சிலரும் இதுபற்றி ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார்கள். ‘தினகரன் இடதுசாரிகளோடு கூட்டணி பற்றி பேசிவருவதாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். நீங்க உயர் மட்ட செயல் திட்டக் குழுவில் பேசும்போது திமுக கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகள் தொடர்ந்து நீடிக்கும்னு சொன்னீங்க. ஆனால், தினகரன் பேட்டியை பார்த்தால் கம்யூனிஸ்டுகள் அவர் கூட பேசிக்கிட்டிருக்காங்களோனு ஒரு டவுட் வருது. ஏற்கனவே தா.பாண்டியன் சசிகலாவுக்கு ரொம்ப நெருக்கமானவர்னு எல்லாருக்கும் தெரியும்.

தி.மு.க. கூட்டணியில் குண்டு போடும் டி.டி.வி.தினரன்..!

இப்போதைய சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசனும் தினகரனும் திருத்துறைப்பூண்டி காரர்கள். ஒருவேளை அவங்க பேசியிருக்கலாம் அல்லது மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து யாரும் பேசியிருக்கலாம்’என்று ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து முதலில் மார்க்சிஸ்ட் செயலாளரை கூப்பிட்டுப் பேசியிருக்கிறார் ஸ்டாலின். யமஹா போராட்டம், சீதாராம் யெச்சூரி விசிட் பற்றியெல்லாம் பேசியபிறகு கே.பாலகிருஷ்ணனிடம் தினகரனின் பேட்டியில் இடதுசாரிகள் பற்றி பேசியிருப்பதை சுட்டிக் காட்டிக் கேட்டிருக்கிறார். அதற்கு கே.பாலகிருஷ்ணன் நாங்கள் யாரும் தினகரனிடம் தொடர்பில் இல்லை என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP