திசை திருப்பவா தீர்ப்புகள்!

எந்த தண்டனையாக இருந்தாலும் அப்பீல் செய்ய வாய்ப்பு இருக்கும் நிலை. இதில் வெகு வெகு சொற்பமான வழக்கில் மட்டுமே அறிவிக்கப்பட்ட தண்டனை அதிகரிக்கப்படும். பெரும்பாலும் தண்டனை குறைப்புதான். அதுவும் துாக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாறும்.
 | 

திசை திருப்பவா தீர்ப்புகள்!

இந்தியாவில் நடக்கும் சம்பவங்களில் விஷ்வல் நக்சல் பார்வையில் படுகின்றவை மட்டுமே  மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

சுவாதி கொலை, நிர்பயமா பாலியல் பலாத்காரம், சுபஸ்ரீ மரணம், சுஜீத் சாவு என்று சம்பவங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

சம்பவம் நடந்த உடனே மீடியாக்கள் பார்வை படுவதால் வழக்கின் போக்கு திசை திருப்பப்படுகிறது. நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை மட்டுமே வழங்குகிறார்கள். இதை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நீதிவென்றது ; நியாயம் ஜெயித்தது என்ற நினைவுடன் அடுத்த சம்பவத்தை பார்த்து கடந்து செல்கிறார்கள். 

ஆனால் சம்பந்தப்பட்ட உச்சத பட்ச தீர்ப்பு அமல்படுத்தப்படுகிறதா என்று பார்க்கும் போது வேதனையே மிஞ்சுகிறது. இந்த சிக்கலில் சிக்குவது மரண தண்டனை தான். இந்தியாவில் விதிக்கப்படும் அனைத்து மரண தண்டனைகளும் உடனே நிறைவேற்றப்படுவதில்லை.

இந்தியாவில் துாக்கு தண்டனை என்ற தலைப்பில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டது. அதில் டிசம்பர் 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை நாடு முழுவதும் 371 கைதிகள் துாக்கு தண்டனை பெற்று அடைக்கப்பட்டுள்ளனர். 2016ம் ஆண்டு துாக்கு தண்டனை பெற்ற கைதிகள் எண்ணிக்கை 399 என இருந்தது. 2015ம் ஆண்டில் பாலத்கார கொலை வழக்குகளில் துாக்கு தண்டனை 55 சதவீதம் அதிகரித்துள்ளது.

உடுமலை சங்கர் ஆணவக் கொலையில் அவரது காதலி கவுசல்யாவின் தந்தை சின்னசாமியின் தந்தை உட்பட 4 பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதுபோன்ற தண்டனைவிதிக்கும் போது இரட்டை துாக்கு தண்டனை விதிக்கும் வினோத நடைமுறையும் இருக்கிறது. முதல் துாக்கிலேயே குற்றவாளி இறந்து விடுவார் என்ற நிலையில் இரட்டை துாக்கு எப்படி நிறைவேற்றப்படும் என்பது அந்த நீதிபதிக்கே வெளிச்சம்.

எந்த தண்டனையாக இருந்தாலும் அப்பீல் செய்ய வாய்ப்பு இருக்கும் நிலை. இதில் வெகு வெகு சொற்பமான வழக்கில் மட்டுமே அறிவிக்கப்பட்ட தண்டனை அதிகரிக்கப்படும். பெரும்பாலும் தண்டனை குறைப்புதான். அதுவும் துாக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாறும்.

கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி கோவையை சேர்ந்த தொழிலதிபரின், 11 வயது மகள் முஸ்கான், 8வயது மகன் ரித்திக் ஆகியோர் கடத்தி கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 2012ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றவாளி மோகன்ராஜ், அவன் கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இதில் மோகன்ராஜ் தப்பி செல்ல முயன்ற போது என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.  மற்றொரு குற்றவாளி மனோகனுக்கு இரட்டை துாக்கு தண்டனை, 3 ஆயுள் தண்டடைன விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பிறகு மனோகரன் மேல்முறையீடு செய்து சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 

இதில் உச்சநீதிமன்றம் உறுதி செய்ததாக 2019 ஆகஸ்ட். 1ம் தேதி செய்தி வெளியானது. அதாவது 2010ம் ஆண்டு நடந்த சம்பவத்தில் குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை 2019ம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்த இயலவில்லை என்றால் அதன் பலன் என்ன?

குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பது  அதனை மற்றவர்கள் செய்யக் கூடாது என்பதற்காகதான் . ஆனால் அதை நிறைவேற்றுவதற்குள் சம்பந்தப்பட்ட குற்றத்தை மற்றவர்கள் மறந்துவிடுவார்கள் என்ற நிலையில் இந்த தண்டனை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதே நிலைதான் நிர்பயா வழக்கிற்கும் 2012ம் ஆண்டு நடந்த சம்பவத்தில் 2017ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்படனர். அவர்களில் ஒருவர் மைனர் என்பதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அதன் காலம் முடிந்ததும் வெளியே வந்து விட்டார். 

இதில் குற்வாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்து நேற்று அது தள்ளுபடி செய்யப்பட்டது. குற்றவாளிகள் 7 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு கருணை மனுத்தாக்கல் செய்யலாம். அவர் எப்போது வேண்டுமானாலும் முடிவு செய்யலாம்.

இப்படி துாக்கு  தண்டனையை நிறைவேற்றுவதில் பல சிக்கல் இருப்பதை அறிந்தும் கூட துாக்கு தண்டனை, இரட்டை துாக்கு தண்டனை என்றெல்லாம் தீர்ப்பு வழங்குவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. 

பால் போல பொங்கும் மக்களை தண்ணீரை தெளித்து அடக்குவது போல தான் தண்டனை அறிவிப்புகள் இருக்கிறதே தவிர்த்து. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது போல தெரியவில்லை.

சட்டத்துறையின் இந்த நடவடிக்கை மக்களை திசை திருப்புமே தவிர்த்து குற்றவாளிகளுக்கு தண்டனையாக அமையாது. அதனால் எவ்வித சலனத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தாது என்பதை நீதிபதிகள் புரிந்து .கொள்ள வேண்டும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP