கரைந்து போனது கருப்பு சாயம்; பல் இளிக்குது பகுத்தறிவு வேஷம்!

அவரை விட அதிகம் நாத்திகம் பேசிய வைகோ, கடவுள் நம்பிக்கை உள்ளவன் கோவிலுக்கு போகிறான் அவனை ஏன் கிண்டல் செய்கிறாய் என கேள்வி கேட்கிறார். 99 சதவீதம் பேர் கோவிலுக்கு போவதாக ஒப்புதல் வாக்குமூலம் தரும் வைகோ, தங்கள் ஊரில் தன் சொந்த செலவில் கோவில் கும்பாபிஷேகம் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
 | 

கரைந்து போனது கருப்பு சாயம்; பல் இளிக்குது பகுத்தறிவு வேஷம்!

விறகுகளை பெரிய கட்டாக கட்டினால் நெகிழந்து விடும், அதனை பிரித்து 4, 4 விறகுகளாக கட்டி, பின்னர் அதனை பெரிதாக கட்டினால், பெரிய விறகு கட்டுகள் அப்படியே இருக்கும். அதே போலதான், ஜாதிகள் என்று காஞ்சி பெரியவர் விளக்கம் அளிப்பார். 

தமிழ்தாத்தா உ.வே.சா., 'என் சரிதம்' என்ற தன் வரலாற்று நுாலில், அவர் படிப்பதற்கு யார் யார் உதவிகள் செய்தார் என்று விரிவாக குறிப்பிட்டு இருப்பார். அவர் அவர் ஜாதி வழக்கங்களை ஒழுங்காக கடைபிடித்த வரையில், எவ்விதமான பிரச்னையும் நாட்டில் இல்லை. அதற்கு பதிலாக சமுதாயத்திற்காகவே வாழ்ந்த பிராமணர்கள், ஆங்கில கல்வி கற்று தங்கள் குடும்பத்திற்காக வாழத் தொடங்கிய பிறகும் கூட, தங்கள் ஜாதி அடிப்படையிலான மரியாதையை எதிர்பார்த்த போதுதான் சமுக சிக்கல்கள் உருவாகின.

நீர் பூத்த நெருப்பாக இருந்த இந்த சிக்கல்களை, ஈவேரா ஊதி பெரிதாக்கினார். அவரால் பிள்ளையார் சிலைகள் வீதிகளில் அடித்து நொறுக்கப்பட்டன. ராமனுக்கு செருப்பு மாலை இட்டு ஊர்வலம் போனார்கள். பக்தி கொண்டவர்கள் பதறினார்கள். துடித்தவர்கள் பிராமணர்கள் மட்டும் என்பது மடத்தனம். 

கரைந்து போனது கருப்பு சாயம்; பல் இளிக்குது பகுத்தறிவு வேஷம்!

அடிமைகள் என்று ஈ.வே.ரா.,வால் அடையாளம் காணப்பட்டவர்கள் மகிழ்ந்தார்கள். தமிழகத்தில் ஈவேரா மட்டும் தான் மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பது திமுக ஏற்படுத்திய மாயை. இரட்டை மலை சீனிவாசன், அயோத்தியாதாசர், இம்மானுவேல், ராமானுஜர், ஐயா வைகுண்டர், முத்துராமலிங்க தேவர்  என்று பல மகான்கள், தலைவர்கள் தங்கள் காலத்தில் சீர்திருத்தவாதியாகவே இருந்துள்ளார்கள். 

ஆனால் அவர்களை எல்லாம் சிறு சிறு குழுக்களுக்குள் அடக்கி விட்டு, ஈவேராவை திமுக துாக்கி பிடித்ததும், அவரின் இந்துமத எதிர்ப்பு தங்கள் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்ததால், ஈவேராவின் புகழ் திட்டமிட்டபடி பரப்பப்படுகிறது. திமுக ஆட்சி தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்பதால் இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறார்கள்.

ஒட்டு மொத்த வாக்கு வங்கி கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களிடம் இருக்கிறது என்பதால் தான், இந்து விரோதம் இங்கு வேர் ஊன்றி உள்ளது என்பதை நன்கு புரிந்து கொண்டவர்கள், கட்சி வித்திரயாசம் இல்லாமல் இந்து ஓட்டு வங்கி உருவாக வேண்டும் என்ற விதையை விதைத்தார்கள். அது கடந்த தேர்தலில் நன்கு வேர் விட்டு வளர்ந்து வெளிப்பட்டது. 

திக வீரமணி இந்துக்களை விமர்சனம் செய்த போது, இந்து ஓட்டுகள் என்ற அடிப்படையில் திமுகவிற்கு எதிரான பிரச்சாரம் உருவானது. ஆனால் தேர்தல் முடிவு, திமுகவிற்கு ஆதரவாக இருந்ததால் இந்து ஓட்டு வங்கியின் பலன் முழுமையாக கிடைக்காமல் போய்விட்டது.

கரைந்து போனது கருப்பு சாயம்; பல் இளிக்குது பகுத்தறிவு வேஷம்!

ஆனாலும், இந்து விரோத கருத்துக்களை விதைப்பவர்கள் மனதில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அது வரையில் திராவிடர் கலாச்சாரத்தின் முதல் குடும்பமாக இருக்கும் கருணாநிதியின் குடும்பத்தினர், பக்தியை வெளிப்படையாக காட்ட தொடங்கினர். 

திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, அத்திவரதரை தரிசனம் செய்தார். ஸ்டாலின் சித்தி ராசாத்தி அம்மாள் ( அப்பாவின் துணைவி இந்த உறவு முறைதான்) கனிமொழிக்காகவும், திமுகவின் வெற்றிக்காகவும் கோயில் கோயிலாக வெளிப்படையாக சுற்றினார். 

திக தலைவர் வீரமணியே வருந்தும் அளவிற்கு முதல் குடும்பத்தின் பக்தி பிரச்சாரம் இருந்தது.  அதை விட கொடுமை ஈவேராவின் கொள்கையால் உருவான திமுக, வீரமணியை பிரச்சாரத்திற்கே வர வேண்டாம் என்று சொல்லியதாக கூறுகிறார்கள்.

இந்த குடும்பமே மாற்றிவிட்டதால், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் நான் ஒரு இந்து என்பதில் பெருமை கொள்கிறேன் என்றார். இது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டதற்கு இந்து மதத்தை மட்டும் இழிவு படுத்துவது தான் திமுகவின் இலட்சியமா என்று கேட்கிறார். நா தழும்பேற நாத்திகம் பேசிய வைகோ,  99 சதவீதம் கோயிலுக்கு போகிறார்கள். அவர்களை ஏற்க வேண்டும் என்று பேசுகிறார். 

கரைந்து போனது கருப்பு சாயம்; பல் இளிக்குது பகுத்தறிவு வேஷம்!

வைகோ மாறிவிட்டார் என்று விமர்சனம் எழும் ஆம் நான் மாறிவிட்டேன் அண்ணாதுரை 1940களில் பேசியதை 1960களில் பேச வில்லை, காலத்தின் மாற்றத்தை ஏற்க வேண்டும் என்று கூறுகிறார். கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் சர்ச்களில் ஊழல் இருக்கிறது. 

ஒரே ஒரு பள்ளியை நடத்தும் சர்ச் நிர்வாகிகள் ஆண்டுக்கு செலவு போக ஒரு கோடி ரூபாய் பாக்கி இருக்கிறது. அதற்கு இது வரையில் எந்த கணக்கும் இல்லை என்று சபை நிர்வாககள் கூறுகின்றனர். சபைகளில் முறைகேடு உள்ளது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கூட நாங்கள் இந்து விரோதிகள் இல்லை. என் மனைவி கூட கோயிலுக்கு போகிறார் என்று மேடையிலேயே பேசுகிறார். அடுத்த இடத்தில் உள்ள துரைமுருகன் தன் மகனுக்கு விபூதி பூசுகிறார், குடும்பத்தினருடன் கோயிலுக்கு செல்கிறார். 

தமிழகத்தில் இது போன்ற வாத பிரதிவாதங்களை கேட்கும் போது, இந்துக்கள் ஓட்டு வங்கி எந்தவளவுக்கு மவுனமாக மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தெரிய வருகிறது. 

ஈ.வே.ரா.,எனும் நாத்திக ஆலமரத்தின் விழுதுகளாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அண்ணாதுரை, தேர்தல் அரசியல் என வந்ததும், ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றார். அப்போதே ஆலமரத்தின் முதன்மை விழுது கலகலத்துவிட்டது. 

அவரை தொடர்ந்து வந்த கருணாநிதியோ, ஹிந்துக்களை தவிர மாற்று மத பண்டிகைகளில் பங்கேற்று, தன் விசாலமான நாத்திகத்தை வெளிப்படுத்தினார். அவரின் கொள்கைகளை அவர் வீட்டு பெண்களே கேட்காத போது ஊருக்கு உபதேசம் செய்து வந்தார். 

கரைந்து போனது கருப்பு சாயம்; பல் இளிக்குது பகுத்தறிவு வேஷம்!

அவரை விட அதிகம் நாத்திகம் பேசிய வைகோ, கடவுள் நம்பிக்கை உள்ளவன் கோவிலுக்கு போகிறான் அவனை ஏன் கிண்டல் செய்கிறாய் என கேள்வி கேட்கிறார். 99 சதவீதம் பேர் கோவிலுக்கு போவதாக ஒப்புதல் வாக்குமூலம் தரும் வைகோ, தங்கள் ஊரில் தன் சொந்த செலவில் கோவில் கும்பாபிஷேகம் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்டவர்கள்தான் ஊரில் உள்ளவர்களிடம் பகுத்தறிவு என்ற பெயரில் நாத்திகம் பரப்பி வருகின்றனர். சமத்துவம், சமூக நீதி பேசி, திக, திமுக தலைவர்களுடன் நெருக்கம் காட்டும் திருமாவோ, சாமி கும்பிடாத தலைவரும் அல்ல. 

தேர்தலுக்காகவும், ஆட்சியை பிடிப்பதற்காகவும் வியூகத்தை மற்ற வேண்டும் என்கிறார் வைகோ. அப்படியானால், ஹிந்துக்கள் எப்போதும் இவர்களுக்கான ஓட்டு வங்கிகள் மட்டுமே. அவர்களின் நலனில் இவர்களுக்கு உண்மையில் அக்கறை இல்லை என்பதை அவரே தன வாயால் ஒப்புக்கொண்டுள்ளார். இவர்களை நம்பி ஓட்டளித்த ஹிந்துக்களின் பாடு, பூனையை நம்பி அப்பத்தை பறிகொடுத்த குரங்கின் கதையாகத்தான் இருக்கும்.

இந்து மதத்தின் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பாக ஒன்றாக இணைந்து தங்கள் கோரிக்கைகளை ஆலோசனை செய்து, அதை நிறைவேற்றும் கட்சிக்கு தான் ஓட்டு என்று சொல்லி, கனிசமான எண்ணிக்கையில் கவுன்சிலர்கள் தேர்வு பெற்றால் கூட, இந்து விரோத கருத்துக்கள் தமிழகத்தில் அடங்கி, அனைத்து மதங்தங்களை ஒன்றாக மதிக்கும் உண்மையான மதச்சார்பின்மை மலரும். இந்துக்களை நோக்கி தென்றல் திரும்பி இருக்கிறது. அவர்கள் ஜன்னலை அடைத்துவிடக் கூடாது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP