திசை மாறும் திமுக!

விஞ்ஞானரீதியாக ஊழல் செய்தவர் கருணாநிதி என்று சர்க்காரியாவால் குறிப்பிடப்பட்டவர் கருணாநிதி. முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது முதல், ஆட்சியின் கடைசி காலகட்டம் வரை ஊழலிலேயே குளித்தவர். ஆனால் நாம் தான் குறிப்பிடலாமே தவிர்த்து, எதற்கும் ஆதாரமோ, நடவடிக்கையோ தண்டனையோ கடைசி வரை கிடைக்கவில்லை.
 | 

திசை மாறும் திமுக!

திருக்குவளையில் இருந்து சென்னைக்கு ரயில் டிக்கெட் எடுக்க கூட வழியில்லாமல் வந்து இறங்கியவர் கருணாநிதி. அவர் அமைச்சர் ஆகும் முன்பு வரை பட்ட கஷ்டங்களை, துன்பங்களை நெஞ்சுக்கு நீதியில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். மனைவி பத்மாவதி இறந்த தகவல் புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் பேசிக் கொண்டு இருந்த கருணாநிதிக்கு கிடைக்கிறது. அங்கிருந்து லாரியை பிடித்து ஊருக்கு வந்து சேருகிறார். இந்த அளவிற்கு தான் கருணாநிதியின் பொருளாதார வசதி இருந்தது.

தற்போது அவர்கள் குடும்பம், உலக பணக்காரர்கள் வரிசையில் ஒன்றாகி விட்டது. இத்தனைக்கும் காரணம் கருணாநிதி என்கிற ஒற்றை மனிதன் தான்.  அவரை ராஜதந்திரி என்று அனைவரும் பாராட்டுவதற்கு காரணம் பூஜியத்தில் இருந்து 70 ஆண்டுகளில் அசைக்க முடியாத ராஜியத்தை உருவாக்கியது தான்.

விஞ்ஞானரீதியாக ஊழல் செய்தவர் கருணாநிதி என்று  சர்க்காரியாவால் குறிப்பிடப்பட்டவர் கருணாநிதி. முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது முதல், ஆட்சியின் கடைசி காலகட்டம் வரை ஊழலிலேயே குளித்தவர். ஆனால் நாம் தான் குறிப்பிடலாமே தவிர்த்து, எதற்கும் ஆதாரமோ, நடவடிக்கையோ தண்டனையோ கடைசி வரை கிடைக்கவில்லை. 

இது ஏதோ கருணாநிதி குடும்பம் மட்டும் ஊழல் செய்தது என்று அல்ல, நம்ம ஊரில் உள்ள கவுன்சிலரின் வளர்ச்சியை பார்த்தாலே. அந்த கட்சி எந்த முறையில் ஆட்சி செய்தது என்று தெரியும். இன்றைக்கு கருணாநிதி மறைந்துவிட்டார். அவருடன் இந்த ராஜதந்திரமும் மறைந்து விட்டது என்றே சொல்லலாம். தேர்தல் நேரத்தில் துரை முருகன் வீடு, அவர் மகன் கல்லுாரி என்று பல இடங்களில் இருந்து கோடி கோடியாக பணம் அள்ளப்படுகிறது. இதையாவது அரசியல் காரணம் என்று கூறிவிடலாம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி உதவியுடன் சிலர் பண மோசடி செய்தனர். அதிகம் இல்லை ரூ. 80 லட்சம் தான். இதனால் ஏமாற்றப்பட்ட சென்னை சவுகார்பேட்டையில்  காஸ்மெட்டிக் வியாபாரி தினேஷ் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். 

கடைசியில் சாதாரண வீட்டு விவகாரம் போலவே மாமியார் பணம் கொடுத்து மருமகனை காப்பாற்றினார். ஆனால் மருமகன் மீது இந்த புகார் மட்டும் அல்லாமல் கடந்த பல வருடங்களாக பல புகார்கள் நிலுவையில் உள்ளன. அவர்கள் எல்லாரும் மாமியார் வீட்டு கதவை தட்டினால் மாமியார் பாடு திண்டாட்டம் தான். 

அதனால் அவர் மருமகன் ஜோதி மணிக்கும் எங்களுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்று தங்களின் குடும்ப பத்திரிக்கையில் விளம்பரமே கொடுத்துவிட்டார். நிச்சயம் கருணாநிதியாக இருந்தால் புகார் பதிவாகி இருக்குமா என்பதே கேள்விக்குறி. அப்படி ஏதேனும் நடந்தால் கூட, திரைப்படத்தில் சு.பா. வடிவேலு ஆடு திருடிய பஞ்சாயத்து போல தான் அதன் முடிவு இருக்கும்.

ஆனால் அவரைப் போல, திமுக முதல் குடும்பத்திற்கு கருணாநிதி கையாண்ட வழிமுறைகளை கடைபிடித்தால் போதும். தற்போது செல்விக்கு தேவையான பாடம் கனிமொழியின் வாழ்க்கையை கருணாநிதி எப்படி கையாண்டார் என்பதை அறிந்தால் போதும்.

கருணாநிதியின் மனசாட்சி மாறன் என்று குறிப்பிடுவதைப் போல கருணாநிதியின் நிழலாக இருந்த சண்முக நாதனிடம் ஆலோசனை கேட்டு நடந்தால் போதும்.

திமுக தலைவர் ஸ்டாலின், அழகிரி பஞ்சாயத்தை தீர்த்து, இருவரையும் சமாளிக்கும் செல்வி  குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்சனை என்பது நிச்சயம் வருந்த தக்கது தான். அதே நேரத்தில் கருணாநிதி குடும்பத்தில் முதல் முறையாக ஊரை ஏமாற்றிய ஒரு சம்பவத்தில் பத்திரிக்கையில் எங்களுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்று வெளிப்படையாக அறிவித்தது, திமுக வழக்கமான திசையில் இருந்து மாறிவிட்டதை காட்டுகிறது. அது தமிழகத்திற்கு நல்லது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP