சொன்னீர்களே... செஞ்சீங்களா? பெண்களின் பாதுகாப்பிற்கான நிர்பயா நிதியை 1 ரூபாய் கூட செலவழிக்காத 5 மாநிலங்கள்!

சொன்னீர்களே... செஞ்சீங்களா? பெண்களின் பாதுகாப்பிற்கான நிர்பயா நிதியை 1 ரூபாய் கூட செலவழிக்காத 5 மாநிலங்கள்!
 | 

சொன்னீர்களே... செஞ்சீங்களா? பெண்களின் பாதுகாப்பிற்கான நிர்பயா நிதியை 1 ரூபாய் கூட செலவழிக்காத 5 மாநிலங்கள்!

தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள நிர்பயா நிதித் திட்டத்தை முறையாக பயன்படுத்த மாநிலங்கள் தவறிவிட்டதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. 

கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டதையடுத்து, நாடு முழுவதுமுள்ள பெண்களின் பாதுகாப்பிற்காக நிர்பயா நிதியுதவி திட்டத்தை கடந்த 2013ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்காக ரூ.1000 கோடி வரை ஆண்டுதோறும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. டெல்லிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.390 கோடியில் ரூ.19.41 கோடியை மட்டுமே அம்மாநில அரசு செலவழித்துள்ளது.

சொன்னீர்களே... செஞ்சீங்களா? பெண்களின் பாதுகாப்பிற்கான நிர்பயா நிதியை 1 ரூபாய் கூட செலவழிக்காத 5 மாநிலங்கள்!

மராட்டியம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரேதசமான டாமன் மற்றும் டையூ, ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை. பெரும்பாலான மாநிலங்கள், நிர்பயா நிதியில் 50 சதவீததத்தை கூட செலவழிக்காமல் உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.119 கோடி நிதியில் வெறும் ரூ.3.93 கோடியும், கர்நாடகாவுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.192.72 கோடி நிதியில் ரூ.13.62 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. அதே போல், தெலுங்கானா மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.103 கோடி நிதியில் ரூ.4.19 கோடியும், குஜராத் மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.70.04 கோடி நிதியில் ரூ.1.18 கோடியை மட்டுமே அம்மாநில அரசுகள் செலவழித்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில், நிர்பயா திட்டத்தில் ஒதுக்கப்பட்ட சுமார் ரூ.43.16 கோடியில் ரூ.6.39 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP