பிரதமரிடம் ஆதரவு கேட்கவில்லை;அரசியல் பேசவில்லை: துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் 

சென்னை வந்த பிரதமரிடம் இடைத்தேர்தல் தொடர்பாக ஆதரவு கேட்கவில்லை என்றும், ஆதரவு கேட்டதாக வெளியான தகவல் தவறு என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 | 

சென்னை அருகேயுள்ள திருமழிசை பகுதியில் குடியிருப்புகள், பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். 

இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர், ‘நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர்  முரளிதர ராவிடம் பேசியுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் அரசியல் பேசப்படவே இல்லை. பாஜக - அதிமுக இடையேயான கூட்டணி உறவில் எந்த பிளவும் இல்லை. பாஜகவினர் கண்டிப்பாக தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவார்கள்’ என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP