பொதுத்தேர்வு பிஞ்சு உள்ளங்களில் நடத்தப்படும் கொடூரமான தாக்குதல்: தொல்.திருமா

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிஞ்சு உள்ளங்களில் நடத்தப்படும் கொடூரமான தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 | 

பொதுத்தேர்வு பிஞ்சு உள்ளங்களில் நடத்தப்படும் கொடூரமான தாக்குதல்: தொல்.திருமா

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிஞ்சு உள்ளங்களில் நடத்தப்படும் கொடூரமான தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 5 ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு பிஞ்சு உள்ளங்களில் நடத்தப்படுகின்ற கொடூரமான தாக்குதல். இது பள்ளி மாணவர்களை மேற்படிப்புக்கு செல்ல விடாமல் இடைநீக்கம் செய்யக்கூடிய ஒரு முயற்சி. சாதாரண அடித்தட்டு மக்களுக்கும்,  ஏழை எளிய மக்களுக்கும் உயர்கல்வி கற்க கூடாது என்ற நோக்கத்தில்,  இது செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு  தமிழ்நாடு அரசு துணை போவது வேதனையளிக்கிறது. 

ஒரே நாடு,  ஒரே மொழி என்பதெல்லாம் பாஜகவின் நீண்ட நாளைய கனவு.  இது இந்தியாவை  துண்டாக்க வழிவகுக்கும். தேசத்தை பாதுகாக்க மத்திய அரசின் கல்வி கொள்கை, மொழி கொள்கை போன்றவற்றை ஜனநாயக சக்திகள் கடுமையாக எதிர்க்க வேண்டும். தேசிய அளவில் ஒன்று சேர்ந்து போராட  வேண்டும்.

பேனர் வைக்கும் விவகாரத்தில் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடாது. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல பல வழிமுறைகள் உள்ளன. தமிழ்நாட்டில் அதிகரித்து இருக்கும் பேனர் கலாச்சாரத்தை தடுக்க தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்.

ரேஷன் என்கிற பொது விநியோகத் திட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பது பா.ஜ.க வின் திட்டங்களில் ஒன்று. கார்ப்பரெட் நிறுவனங்களின் விருப்பமும் அது தான். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் அரசியல் உள்நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், வட நாட்டு நிறுவனங்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பொருளாதாரக் கொள்கையை வகுத்துள்ளது. அதனால் ஏற்படக்கூடிய  பின்விளைவுகள் தான் தமிழ்நாட்டிற்கு மண்ணெண்ணெய் குறைவாக வழங்குவது போன்ற செயல்பாடுகள் என கூறினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP