கஜா புயலில் வெளுத்த டி.டி.வி.தினகரனின் சாயம்... கடுங்கோபத்தில் டெல்டா மக்கள்!

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காமல் வெற்று அறிக்கைகளை மட்டுமே கொடுத்து வரும் டி.டி.வி.தினகரன் மீது டெல்டா விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
 | 

கஜா புயலுக்கு சின்ன குழந்தைகள் முதல் சிறிய, பெரிய இயக்கங்கள், தொழில் நிறுவனங்கள், நடிகர்கள், அரசியல் கட்சிகள் எல்லாம் தங்கள் சக்திக்கு உட்பட்டு ஆயிரம் ரூபாய் முதல் பல கோடிகளை முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுத்து வருகிறார்கள். சிலர் நிதிக்கு பதிலாக ரொட்டி, பெட்ஷீட், துண்டு, பாய், அரிசி, பால் என்று நிவாரண பொருட்களாக நேரடியாக களத்துக்கு சென்று கொடுத்து மக்களை சாந்தப்படுத்தி வருகிறார்கள்.

கஜா புயலில் வெளுத்த டி.டி.வி.தினகரனின் சாயம்... கடுங்கோபத்தில் டெல்டா மக்கள்!

பல அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை மட்டுமில்லாமல்  நிதி மற்றும் நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அந்த மண்ணின் மைந்தர். அவர் நினைத்தால் 25 கோடி கூட  நிவாரண நிதி தரலாம். தொண்டர்களை களத்தில் இறக்கி அரிசி, பருப்பு, கூரைவீடுகளுக்கு தேவையான தென்னங்கீற்று, கம்புகள், ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள், இறந்துபோன ஆடு, மாடுகளை வாங்கித் தரலாம். மற்ற கட்சிகளை விட இவர் சொந்த ஊர்க்காரர் என்பதால் அனைத்து பணிகளையும் தானே முன்னின்று செய்து பொதுமக்களின் துயரங்களை தீர்க்க முயற்சித்து இருக்கலாம்.

கஜா புயலில் வெளுத்த டி.டி.வி.தினகரனின் சாயம்... கடுங்கோபத்தில் டெல்டா மக்கள்!

ஆனால், கடமைக்கு போனார். வந்தார். தினமும் ஒரு காகிதத்தில் அறிக்கை தயாரித்து அரசு சரியில்லை. நிவாரண பணிகளில் எச்சரிக்கையாக இல்லை என குறை சொல்லிக்கொண்டு மட்டுமே வருகிறார். அதற்கு அந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள்,  ’’அறிக்கை விடறது எளிது. மண்ணின் மைந்தரான இவர் ஒரு லிட்டர் பால் தந்தாரா? பசியில் வாடியவர்களுக்கு ஒரு ரொட்டி துண்டாவது தந்தாரா? எனக் கோபத்தில் இருக்கிறார்கள்.  ’எதுக்கெடுத்தாலும் நம்ம சொந்தக்காரங்க. நான் இந்த ஊர்காரன். என்னை மக்கள் கைவிட மாட்டாங்க’னு சொல்கிறார. ஆனால் கஜா புயல் நிவாரணத்துக்கு நயா பைசா கூட தராமல் மக்களை கைவிட்டதை பற்றிதான் மாவட்டக்காரர்கள் பேசி வருகிறார்கள்.

கஜா புயலில் வெளுத்த டி.டி.வி.தினகரனின் சாயம்... கடுங்கோபத்தில் டெல்டா மக்கள்!

அதுமட்டுமல்ல. சசிகலாவும் டெல்டா மாவட்ட மக்களின் துயரத்தை கண்டும்காணாமல் இருக்கிறார். நிதி கொடுக்கச் சொல்லி ஏதாவது ஏற்பாடு செய்யலாமே’’என குமுறுகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP