புகழேந்தியின் சர்ச்சை வீடியோ குறித்து விசாரணை: டி.டி.வி.தினகரன்

அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தொடர்பான சர்ச்சை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
 | 

திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய டிடிவி.தினகரன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "புகழேந்தி குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவை நானும் பார்த்தேன். இந்த வீடியோ அமமுக நிர்வாகிகள் வெளியிட்டதாக தெரியவில்லை. இதற்கு முன்பு தங்கத்தமிழ்செல்வன் கட்சியில் இருந்து விலகும் போது ஒரு ஆடியோ பதிவு வெளியானது அது கட்சி நிர்வாகிகள் வெளியிட்டது உண்மைதான் தற்போது இந்த வீடியோ குறித்து உரிய முறையில் விசாரிக்கப்படும்..

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கட்சியிலிருந்து தொண்டர்கள் நிர்வாகிகள் வெளியேறுவது அவரவர் சொந்த விருப்பத்தின் படி தான் மற்றபடி எந்த ஒரு காரணமும் இல்லை, நமது நோக்கம் அம்மா அவர்கள் தலைமையிலான இயக்கத்தையும் சின்னத்தையும் மீட்டெடுப்பது எனவும் தொண்டர்களிடம் உறுதிபட தெரிவித்தார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP