கறிச் சோறு வாயை கட்டிவிட்டதா  தலைவர்களே!

இவரு ஊத, அந்த அம்மா ஆடுவதை பார்த்தால் தில்லனா மோகனாம்பாள் சிவாஜி, பத்மினி போல இருக்கு என்ற கரக்காட்டக் காரன் நகைச்சுவைக்கு இணையாக, ஸ்டாலின் வரவேற்கவும், பொன்னார் நன்றி கூறவும், செந்தில் கூறுவது போல விளம்பரத்திற்காக என்பது தான் வேதனையானது. இது போன்ற நடிகர்கள் தான், தமிழகத்தின் தலைவர்கள் என்பது இந்த மாநிலம் செய்த பாவம்.
 | 

கறிச் சோறு வாயை கட்டிவிட்டதா  தலைவர்களே!

பாரதப்  பிரதமர் மோடிக்கும், தமிழுக்கும் பூர்வ ஜென்ம தொடர்பு இருக்கும் போல; அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழ் குறித்து ஐ.நா., வரை பாராட்டு மழை பொழிகிறார். அவர் குஜராத்தி மொழிக்காரராக இருந்தாலும், இந்தி தேசிய மொழி என்றாலும் அவர் உயர்த்தி சொல்லுவது தமிழைத்தான். 

இப்போது கூட சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சியில், அவர் வேஷ்டி சட்டையில் தான் உலா வந்தார். பெரும்பாலும் குஜராத்திகளுக்கு தமிழ் மீது பிரியம் அதிகம். அதை மோடி வெளிப்படுத்துகிறார்.

பதிலுக்கு தமிழகத்தில் குறிப்பிட்டசாரார் குறிப்பாக திமுக, மதிமுக மற்றும் அவர்களுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவே தொடர்பு கொண்டவர்கள் மோடியே திரும்பி போ (கோ பேக் மோடி) என்று கோஷம் இட்ட படி வீதி ஓரத்தில் நின்று போராட்டம் நடத்துவார்கள்.

இதற்கு முல்லைப் பெரியாறு, ஸ்டெர்லைட், காவிரி நீர் பிரச்சனை, நியூட்ரினோ விவகாரம் என்று தமிழகத்தின் ஜீவாதார பிச்னைகள் ஆகியவற்றை காரணமாக கூறுவார்கள். சிலர் பலுான் கூட பறக்கவிடுவார்கள்.

ஆனால் இந்த குழுக்களின் தீவிரத்தை பார்த்து மோடி திரும்பி போவார். அல்லது, தமிழகத்தின் ஜீவாதார பிரச்னைகளை தீர்ப்பார். அதன் மூலம் தமிழகர்கள் அனைவரும் மனம் மாறி மோடியை வரவேற்பார்கள் என்று நடுநிலையாளர்கள் ,எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

ஆனால் அவாளின் நடவடிக்கை வேறு விதமாக இருந்தது; எரிவதை பிடுங்கினால், கொதிப்பது தானே அடங்கும் என்பதைப் போல,  சீன அதிபர் ஜி ஜிபிங் மோடி சந்திப்பிற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவ்வளவு தான் மோடி எதிர்ப்பு காற்றில் பறந்து விட்டது. தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்னை ஜீவனை விட்டு விட்டது. எந்த வாய் மோடி வரக் கூடாது என்று கூச்சல் இட்டதோ, அதே வாய், மகாபலிபுரம் சந்திப்பை வரவேற்கிறது. தலைமையே மாறிவிட்டதால் மற்றவர்கள்  மவுனிகளாக மாறிவிட்டனர்.

ஸ்டாலின், வைகோ போன்றவர்களுக்கு அரசியல் காரணங்கள் இருந்தாலும், இயக்குனர் கவுதமன், திருமுருகன் காந்தி, பியூஸ் மானுாஷ் போன்றவர்களும் கோ பேக் மோடியை கைவிட்டு விட்டது தான் வியப்பு அளிகிறது. இதன் மூலம் இவர்களின் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக தெரிகிறது.

இந்த விவகாரத்தில், மேலும் ஒருகேளிக் கூத்து நடத்தது. இரு நாட்டின் உயர்ந்த நிலையில் உள்ள தலைவர்கள் சந்திப்பதை, மூன்றாவது நாட்டின் உயர்ந்த நிலைத் தலைவர் வரவேற்பது இயல்பானது. ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத, எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு மட்டும் வகிக்கும் ஸ்டாலின், அவ்வாறு எதுவும் இல்லாமல் தமிழகதத்தில் உள்ள எம்பிகளில் ஒருவராக இருக்கிற வைகோ வரவேற்கிறார். 

இதனை ஜி ஜின்ங் உன்னிப்பாக கவனித்து இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை அவர் தடுத்து விடுவார். தமிழகம் மோடியின் பக்கம் என்று அவர் உணர்ந்து கொண்டு விடுவதால் டிரம்ப், புடின், வரிசையில் மோடியை ஏற்பார். என்றால் எவ்வளவு காமெடியோ, அதே அளவிற்கு காமெடிதான் இதுவும்.

ஆனால் அதைவிட காமெடி இவர்கள் வரவேற்றதிற்கு தமிழக பாஜக நன்றி சொன்னது தான். இவரு ஊத, அந்த அம்மா ஆடுவதை பார்த்தால் தில்லனா மோகனாம்பாள் சிவாஜி, பத்மினி போல இருக்கு என்ற கரக்காட்டக் காரன் நகைச்சுவைக்கு இணையாக, ஸ்டாலின் வரவேற்கவும், பொன்னார் நன்றி கூறவும், செந்தில் கூறுவது போல விளம்பரத்திற்காக என்பது தான் வேதனையானது. இது போன்ற நடிகர்கள் தான், தமிழகத்தின் தலைவர்கள் என்பது  இந்த மாநிலம் செய்த பாவம்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP