Logo

ஒவ்வொரு குடும்பத்திற்கும் குக்கர், மிக்ஸி... டி.டி.வி தினகரன் அதிரடி!

20 தொகுதிகளில் நடைபெற உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் குக்கர், மிக்ஸியை பொங்கலுக்கு வழங்க டி.டி.வி.தினகரன் அதிரடி திட்டம் வகுத்துள்ளார்.
 | 

ஒவ்வொரு குடும்பத்திற்கும் குக்கர், மிக்ஸி... டி.டி.வி தினகரன் அதிரடி!

இப்போது எல்லா அரசியல் கட்சிகளின் கவனமும் டெல்டா மாவட்டங்களில் மையம் கொண்டிருக்கின்றன. இந்தக் களேபரத்திலும் சத்தமில்லாமல் தினகரன் அணியினர் தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டனர். கடந்த சில தினங்களாக டெல்டா மாவட்டத்திலேயே தங்கியிருக்கும் தினகரன் தன் கட்சி நிர்வாகிகளுக்கு அங்கிருந்தபடியே சில அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் குக்கர், மிக்ஸி... டி.டி.வி தினகரன் அதிரடி!

‘இடைத் தேர்தல் நடக்கப் போகும் 20 தொகுதிகளிலும் அதிமுகவினர் கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டாங்க. நாம அவங்களைவிட அட்வான்ஸாக போயாகணும். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அமமுக பங்களிப்பு இருக்கணும். அதனால் இந்தத் தொகுதியில் இருக்கும் வாக்காளர்களிடம் அவங்க ஆதார் கார்டு ஜெராக்ஸை உடனடியாக வாங்குங்க. ஒரு ஆதார் கார்டு ஜெராக்ஸ்க்கு ஒரு குக்கர் கொடுக்கப் போறோம்னு சொல்லுங்க. இதைப் பொங்கல் பரிசாக உடனடியாக கொடுப்போம்னு சொல்லிடுங்க.ஒவ்வொரு குடும்பத்திற்கும் குக்கர், மிக்ஸி... டி.டி.வி தினகரன் அதிரடி!

ஒரு வீட்டுல நான்கு ஓட்டு இருந்தால், இரண்டு குக்கர் ஒரு மிக்ஸி கொடுக்கிறோம்னு சொல்லிடுங்க. எலெக்‌ஷனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லியே கேளுங்க. அவங்க எல்லோருடைய மொபைல் நம்பரும் நமக்கு வந்துடும். அதை வைச்சு ஒரு டேட்டா ரெடி பண்ணுவோம். குக்கரும் மிக்ஸியும் கொடுக்க ஆரம்பிச்ச நாளிலிருந்து அவங்க செல்லுக்குத் தொடர்ந்து மெசேஜ் அனுப்ப ஆரம்பிக்கலாம். அப்படிப் போனால், எலெக்‌ஷனுக்குள் எல்லோரும் நம்மோடு நெருக்கமாகிடுவாங்க. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குக்கர், மிக்ஸி... டி.டி.வி தினகரன் அதிரடி!

செந்தில் பாலாஜி போட்டியிடப் போகும் அரவக்குறிச்சி தொகுதியில் பல இடங்களில் அவர் ஆதார் கார்டு ஜெராக்ஸ் வாங்கிட்டாரு. டிசம்பர் முதல் வாரத்துக்குள் கார்டு கொடுத்த எல்லோருக்கும் குக்கரும் மிக்ஸியும் கொடுப்பதாக சொல்லிட்டாரு. அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் வர ஆரம்பிச்சிருச்சு. மத்த தொகுதிகளிலும் இதே ஃபார்முலாவை பயன்படுத்த ஆரம்பிங்க. வேறு எந்த ஆதாரமும் கேட்க வேண்டாம். ஆதார் கார்டு மட்டும் வாங்குங்க போதும்...’ என உத்தரவிட்டிருக்கிறார் தினகரன். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP