மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர் 

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
 | 

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர் 

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை(வெள்ளிக்கிழமை) மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்(8.11.2016) மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி திடீரென்று அறிவித்தார்.

இதனால்  விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய மத்திய அரசை கண்டித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 3-ம் ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு நாளை(வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மாவட்டத் தலைவர்கள் அன்று பகல் 11 மணி முதல் 1 மணி வரை அந்தந்த பகுதியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திட கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சிகளின் சார்பில், எனது தலைமையில் ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதன்காரணமாக 9-ந் தேதி நடைபெறுவதாக இருந்த வடக்கு மற்றும் கிழக்கு மண்டல மாவட்டத் தலைவர்கள், பார்வையாளர்கள், பிரிவுகள் மற்றும் துறைகளின் மாநிலத் தலைவர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த கூட்டம் 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP