கரூர் ஆட்சியருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும், அம்மாவட்ட தேர்தல் அதிகாரியான அன்பழகன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தகவல் தெரிவித்துள்ளார்.
 | 

திமுக பிரமுகர்கள் தம்மை மிரட்டுவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களின் கூறியது மிகவும் பரபரப்பான ஒரு செய்தியானது. செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தம்மை நள்ளிரவில் மிரட்டியதாக குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, கரூர் ஆட்சியர் அன்பழகன் மீது காங்கிரஸ் தலைமை, டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. ஆட்சியர் அன்பழகன், ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாக ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது காங்கிரஸ் தலைமை, நேரடியாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தகவல் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP