’பதவிக்கு அவரு... பலிக்கு நாங்களா..? எடப்பாடி மீது அமைச்சர்கள் ஆத்திரம்!

டெல்டா பகுதிகளில் உள்ள அமைச்சர்களை அவ்வப்போது தொடர்பு கொள்ளும் எடப்பாடி எதுவாக இருந்தாலும் நீங்களே சமாளியுங்கள் எனக் கூறுவது அமைச்சர்கள் சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
 | 

’பதவிக்கு அவரு... பலிக்கு நாங்களா..? எடப்பாடி மீது அமைச்சர்கள் ஆத்திரம்!

மணப்பாறை, அறந்தாங்கி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை  என ஆங்காங்கே மின் விநியோகம், அடிப்படை வசதிகளை கேட்டு சாலை மறியல், போராட்டங்கள் என நீண்டு வருகிறது. 

பார்வையிட செல்லும் அமைச்சர்களையும் உயர் அதிகாரிகளையும் ஆங்காங்கே மக்கள் மறித்துவிடுகிறார்கள். அவர்களுக்கு அமைச்சர்கள் என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களுக்காக எதுவும் செய்ய மாட்டீர்கள் என்பதை உணர்ந்துதான் விவசாயிகள் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ஆனால், துணை முதலமைச்சர் கஜா புயல் பாதிப்பால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என பேட்டி அளிக்கிறார். மிச்சம் இருக்கிறவங்களையும் உங்க அரசாங்கம் கொல்ல நினைக்குதா? முதலமைச்சர் இங்கே எல்லாம் வந்து பார்க்க முடியாதா?' என்று சொல்லி அழவே ஆரம்பித்துவிடுகிறார்கள். 

’பதவிக்கு அவரு... பலிக்கு நாங்களா..? எடப்பாடி மீது அமைச்சர்கள் ஆத்திரம்!

இப்படி அமைச்சர்கள் போகும் இடமெல்லாம் அவர்களிடமே அரசைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் மக்கள். களத்தில் இருக்கும் அமைச்சர்கள் எல்லோரும் தினமும் நடக்கும் எதிர்ப்பு சம்பவங்களை அப்படியே முதல்வரிடம் போன் மூலம் சொல்லிவிடுகிறார்கள்.
'அமைச்சர்கள் போன் நெம்பரை மட்டும் கொடுத்துட்டீங்க... கரன்ட்டும் இல்ல. டவரும் இல்ல. அப்புறம் எங்கே போன் எடுக்கும்னு கேட்கிறாங்க...' என்று ஒரு அமைச்சர் சொன்னாராம். அமைச்சர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு, 'நீங்கதான் எல்லாத்தையும் பேசி சரி பண்ணணும்' என்பதை மட்டுமே எல்லா அமைச்சர்களிடமும் சொல்கிறாராம் முதல்வர்.

’பதவிக்கு அவரு... பலிக்கு நாங்களா..? எடப்பாடி மீது அமைச்சர்கள் ஆத்திரம்!

கஜா புயல் பாதிப்பு உச்சத்தை நெருங்கிய நேரத்தில் சேலம் அருகே உள்ள மாமனார் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓரிரு நாட்களுக்குப் பிறகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஹெலிக்காப்டரில் சென்றார். எதிர்ப்புகள் அதிகரிக்கவே, புதுக்கோட்டையோடு திரும்பி விட்டார். அடுத்து பிரதமரிடம் நிதிகேட்டுவிட்டு சென்னை திரும்பிய அவர், மீண்டும் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவில்லை. சென்னையில் நடைபெற்று வரும் அரசு விழாக்களில் பங்கேற்று வருகிறார். அமைச்சர்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு பகலாக மக்களை சமாளித்து வருகின்றனர். 

’பதவிக்கு அவரு... பலிக்கு நாங்களா..? எடப்பாடி மீது அமைச்சர்கள் ஆத்திரம்!

அமைச்சர்களை அவ்வப்போது தொடர்பு கொள்ளும் எடப்பாடி எதுவாக இருந்தாலும் நீங்களே சமாளியுங்கள் எனக் கூறுவது அமைச்சர்கள் சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. பதவி சுகத்தை மட்டும் அவர் அனுபவிக்கணும்... மக்களின் ஆத்திரத்தையும், பாவத்தையும் நாம சமாளிக்கணுமா?’ என சக அமைச்சர்களுக்குள் குமுறி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்டாலின், தினகரன், கமல், வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன் பலரும் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் சுற்றிவருகிறார்கள்.

டெல்டா மாவட்டங்களைப் பார்வையிட்ட முக்கிய நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கிறாராம் முதல்வர். டெல்லிக்குப் போன போது இந்த ஐடியாவை முதல்வருக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP