அதிமுக உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் கருத்து கூற முடியாது: தமிழிசை

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பதிலளித்தால் அதிமுகவை பாஜக இயக்குகிறது என்று கூறுவார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

இன்று சென்னையில் அரும்பாக்கத்தில் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு  பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், "பாஜக - அதிமுக கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டுமே; அதிமுக உட்கட்சி விவகாரத்தில் அன்றாட நிலவரம் குறித்து கூட்டணி கட்சி பதிலளிக்கக்கூடாது. 

அமித்ஷாவை தமிழக அமைச்சர்கள் சந்தித்தது இயல்பான ஒன்று தான். டெல்லியில் நாளை நடைபெற உள்ள பாஜக கூட்டம் இயல்பான கூட்டமே; தமிழ்கத்திற்காக மட்டும் நடத்தப்படும் கூட்டம் என்றெல்லாம் கூறுவது வெறும் வதந்திகளே. 

ராஜராஜசோழன் குறித்து இயக்குனர் ரஞ்சித் கூறிய கருத்து தவறு என்றும், அவர் பேச்சை பேச்சாகவே எடுத்துக்கொள்ள முடியாது" என்று பதில் அளித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP