மாமல்லபுரத்தில் சீன அதிபர்-பிரதமர் பேச்சுவார்த்தை?

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

மாமல்லபுரத்தில் சீன அதிபர்-பிரதமர் பேச்சுவார்த்தை?

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா - சீனா இடையிலான இரண்டாவது மாநாட்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிகழவுள்ளது. அக்டோபர் 11, 13 ஆகிய இரண்டு நாட்கள் பிரதமரும், சீன அதிபரும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

மேலும், பேச்சுவார்த்தைக்கு இடையே இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சிற்பங்களையும், வரலாற்று சின்னங்களையும் பார்வையிட திட்டமிட்டுள்ளதாகவும், தலைவர்கள் சந்திப்பு குறித்து தமிழக அரசு அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP