நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்

நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி நிலைதான் வரும் என முதலமைச்சர் கூறியதில் எள்ளளவும் மாற்றமில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

சேலத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர், கமல்ஹாசன் வயது முதிர்வு காரணமாக அரசியலுக்கு வந்துள்ளதாகவும், நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி நிலைதான் வரும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், மதுரையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், " நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி நிலைதான் வரும் என முதலமைச்சர் கூறியதில் எள்ளளவும் மாற்றமில்லை என தெரிவித்துள்ளார். மேலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக பிரதமர் மோடியை அழைத்துவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP