திகாரில் சிதம்பரம்: குமரியில் போராட்டம் 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து, கன்னியாகுமரியில், காங்கிரஸ் தொண்டர்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு, போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், சிதம்பரம் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், திருவனந்தபுரம் - கன்னியாகுமரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்லியில் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP