தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது தி.மு.க தலைவர்களான துரைமுருகன் ஆ ராசா, கனிமொழி எம்,பி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 | 

தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். 

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி பா.ஜ.கவுக்கு எதிராக கூட்டணி அமைக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சி செய்து வருகிறார். இதற்காக எதிரணிக்கு ஒன்று திரண்டுள்ளன. கூட்டணி அமைக்கும் பொருட்டு பல்வேறு மாநில கட்சித் தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி வருகிறார். 

கடந்த வாரம் டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார். மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்உள்ளிட்ட பலரை சந்தித்தார். நேற்று ம.ஜ.த தலைவர் தேவகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரை சந்தித்ததையடுத்து இன்று மாலை சென்னையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் வீட்டில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது தி.மு.க தலைவர்களான துரைமுருகன் ஆ ராசா, கனிமொழி எம்,பி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP