தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை? ! : இபிஎஸ்

தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசின் பணி கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 | 

தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை? ! : இபிஎஸ்

தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசின் பணிகள் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அனுப்பானடி பகுதியில் முதல்வர் பழனிசாமி இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசின் பணி கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தபோது, தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி கிடைக்க திமுக வழிவகை செய்யவில்லை. மத்திய அரசில் தற்போது அதிமுக ஏதோ அங்கம் வகிப்பது போல் ஸ்டாலின் குறை கூறி வருகிறார்’ என்றார்.

மேலும், "மதுரையில் ஸ்டாலின் பாதுகாப்பாக  நடைபயணம் செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக தெரிவித்த முதல்வர், கருணாநிதி ஆட்சிலேயே மதுரைக்கு பாதுகாப்பாக வர முடியாத ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் தான் வருகிறார்" எனக் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP