’தமிழர்களின் நாகரிகத்தை மத்திய அரசு நசுக்கவில்லை’

கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், தமிழர்களின் நாகரிகத்தை மத்திய அரசு நசுக்கவில்லை என்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

’தமிழர்களின் நாகரிகத்தை மத்திய அரசு நசுக்கவில்லை’

கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், தமிழர்களின் நாகரிகத்தை மத்திய அரசு நசுக்கவில்லை என்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கீழடியில் நடைபெறும் அகழ்வராய்ச்சியை நேரில் சென்று பார்வையிட்டு செய்த பின் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், ‘கீழடியில் அகழ்வராய்ச்சி மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும், அங்கு வெகு விரைவில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். புதுக்கோட்டை, நெல்லை, உதகை உள்பட தமிழகத்தில் 7 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பாக ஒரு மாதத்தில் முழுமையான இறுதி அறிக்கை வெளியிடப்படும். திருமலை நாயக்கர் மஹாலை உலக தரத்திற்கு மாற்ற மத்திய அரசிடம் நிதி கோரி உள்ளோம். மத்திய அரசின் நிதிக்காக கீழடி அகழாய்வில் தொய்வு கூடாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கீழடி மட்டுமின்றி மணலூர், அகரம், கொந்தகை பகுதிகளில் அகழாய்வுக்கு அனுமதி கோரியுள்ளோம். தமிழர்களின் நாகரிகத்தை மத்திய அரசு நசுக்கவில்லை. கிழக்கு தொடர்ச்சி மழையில் அகழ்வராய்ச்சி மேற்கொள்ளப்படும். கீழடி அகழ்வாரய்ச்சியை அரசியல் ஆக்க வேண்டாம்’ என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP