துரைமுருகனுக்கு பொருளாளர் பதவி கிடைக்கக் காரணம் ஜாதி பின்னணி..?

துரைமுருகனுக்கு தி.மு.க பொருளாளர் பதவி கிடைக்கக் காரணம் ஜாதி பின்னணி எனக்கூறப்படுகிறது. அவர் சார்ந்த வன்னியர்களின் வாக்குகளை கவரே அதிகாரமிக்க இந்தப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 | 

துரைமுருகனுக்கு பொருளாளர் பதவி கிடைக்கக் காரணம் ஜாதி பின்னணி..?

தி.மு.க பொருளாளர் பதவிக்கு ஆரம்பத்தில்  துரைமுருகன் பெயரை ‘டிக்’ அடிக்கவில்லை மு.க.ஸ்டாலின். காரணம், தனக்கு நெருக்கமானவரான எ.வ.வேலுவையே பொருளாளர் பதவியில் அமர்த்த திட்டமிட்டிருந்தார். ஆனாலும், சீனியர்களுக்கு இதில் விருப்பமில்லை. அ.தி.முக-வில் இருந்து வந்தவருக்கு பொருளாளர் பதவியா? என முணுமுணுப்புகள் எழத் தொடங்கின. 

மாற்றுக்கட்சியில் இருந்து தி.மு.க-வில் நுழைந்தவருக்கு அமைச்சர் பதவியுடன், உபரியாக மாவட்ட செயலாளர் பதவியையும் வழங்கினார் கருணாநிதி. அப்போதே கட்சிக்குள் கலகக்குரல்கள் முணுமுணுத்தன. ஆனாலும், அவரது நியமனத்தை பகிரங்கமாக எதிர்க்கத்தான் அப்போது யாருக்கும் துணிவில்லை. திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக இருக்கும் எ.வ.வேலுவுக்கு இப்போது  பொருளாளர் பதவியை கொடுக்க திமுகவில் ஏற்பட்ட குமுறலுக்கு மற்றொரு காரணம் ஜாதி.

துரைமுருகனுக்கு பொருளாளர் பதவி கிடைக்கக் காரணம் ஜாதி பின்னணி..?

வட மாவட்டங்களில் குறைந்த அளவில் வசித்து வரும் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர் எ.வ.வேலு. திமுகவின் தொடக்க காலத்தில் வன்னியர்கள் பெரும்பாண்மையாக இருக்கும் வட மாவட்டங்கள் தான், ஒரு காலத்தில்  தி.மு.க-வுக்கு சாதகமான தளங்களாக இருந்தன. எம்.ஜி.ஆர் காலத்திலும் அது நீடித்தது.1977 –சட்டப்பேரவை தேர்தலில் மதுரைக்கு தெற்கே இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயித்தது தி.மு.க. மொத்தமாக 48 இடங்களை அள்ளிக்கொடுத்து  தி.மு.க எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டுவதற்கு வட மாவட்டங்களே முழுமுதற்காரணம்.

பா.ம.க, வருகைக்கு பிறகு வடமாவட்டங்களில் வன்னியர்கள் வாக்குகளை தி.மு.க கணிசமாக இழக்க நேர்ந்தது. வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன் போன்றோர் முகங்களுக்காகவும், தோழமை கட்சிகளின் உதவியாலுமே கடைசி இருமுறை கருணாநிதியால் முதல்வராக முடிந்தது.

துரைமுருகனுக்கு பொருளாளர் பதவி கிடைக்கக் காரணம் ஜாதி பின்னணி..?

தென் மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் முக்குலத்தோர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருக்க அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களில் வன்னியர் வாக்குகள்தான் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். தடுமாற்றத்தில் போராடிக் கொண்டிருக்கும் அதிமுக அரசு, வன்னியர் சமூகத் தலைவரான ராமசாமி படையாட்சியாருக்கு ரூ.2 கோடி செலவில் நினைவு மண்டபம்  கட்டப்படும் என அறிவித்தது கணிசமான வன்னியர்களை கவர்வதற்காகவே எனக்கூறப்படுகிறது. 

துரைமுருகனுக்கு பொருளாளர் பதவி கிடைக்கக் காரணம் ஜாதி பின்னணி..?

இந்த காலகட்டத்தில் தி.மு.க பொருளாளர் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. வன்னியரான துரைமுருகனுக்கு பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டால் மட்டுமே தி.மு.க-வில் எஞ்சியுள்ள வன்னியர் வாக்குகளை தக்கவைக்க முடியும் என்று ஸ்டாலினுக்கு அவரது கிச்சன் கேபினெட் போதிக்க, பின்னரே துரைமுருகனை பொருளாளராக்க ஸ்டாலின் ஒப்புக்கொண்டாராம். கருணாநிதி ,எம்.ஜி.ஆர் போன்ற ஆளுமைகள் அமர்ந்த நாற்காலியில் துரைமுருகனும் அமர்த்தப்பட்டிருப்பதால், வட மாவட்டங்களில் ஓரளவு வாக்குகளை அள்ளலாம் நம்புகிறது தி.மு.க தலைமை.

அதுமட்டுமல்ல... தி.மு.க பொருளாளராக இருந்து வந்த ஆற்காடு வீராசாமி, தனது பதவியை மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தார். அப்போது முதன்மைச் செயலாளராக இருந்த துரைமுருகன் தனது பதவியை ஆற்காடு வீராசாமிக்கு விட்டுக்கொடுத்தார். ஒரு படி கீழிறங்கி துணை முதன்மை செயலாளர் பதவியை மனமுவந்து ஏற்றுக்கொண்டார் துரைமுருகன். இந்த நிகழ்வும் மு.க.ஸ்டாலினுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதன்பிறகே அதிகாரம் மிக்க பொருளாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் துரைமுருகன்.  

-பா.பாரதி

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP