தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு 

நாங்குநேரி தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 | 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு 

நாங்குநேரி தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரெட்டியார்பட்டி வாக்குச்சாவடி அருகே செய்தியாளர்களை சந்தித்ததாக கே.எஸ்.அழகிரி மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, புகாரின் அடிப்படையில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஐபிசி 143, 188, 171h ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, தேர்தல் விதிகளை மீறியதாக வசந்தகுமார் எம்.பி. மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன்பின், தனது சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP