சீமான் மீது வழக்கு பதிவு

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் மீது விக்கிரவாண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 | 

சீமான் மீது வழக்கு பதிவு

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் மீது விக்கிரவாண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் வருவதையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கஞ்சனூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அந்த பிரச்சார கூட்டத்தில், ராஜீவ்காந்தியை கொன்றது சரிதான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரின் பேரில் காவல்துறையினர் சீமான் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக 2பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். 
 
Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP