சட்டம் இயற்றுபவர்கள் சறுக்கி விழலாமா? 

பேனர் வைப்பதே பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கி சம்பவத்தை பேச வைப்பதற்குதான். சோ தன் நாவலில் சலுான், டீக்கடையில் நம்ம கட்சியை பற்றி பேசுகிறானா அப்போது நம்ம கட்சிக்கு வெற்றி தான் என்று குறிப்பிட்டு இருப்பார். அதைப் போலவே சாலையின் நடுவே அதிகவேகத்தில் வானத்தில் விரையும் இரு தலைவர்கள் அந்த பேனரை படிக்கவா போகிறார்கள்.
 | 

சட்டம் இயற்றுபவர்கள் சறுக்கி விழலாமா? 

கடந்த மாதத்தில், தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம் சுபஸ்ரீயின் எதிர்பாராத கோர மரணம். உடனே கோர்ட் தனக்கு தானே முன்வந்து இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்தது. பேனர் வைக்கத் தடை என்று தீர்ப்பளித்தது. இதே போன்ற ஒரு சம்பவம், சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் நடந்தது அப்போதும் கூட இதைப் போன்ற நடவடிக்கையில் கோர்ட் இறங்கியது. 

சாலையில் குழி நோண்டி போட்டு இருந்தாலும், சிக்னல் வேலை செய்யாவிட்டாலும், இருள் சூழ்ந்து இருந்தாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் போது கூட டிராபிக் போலீஸ் செல்போனிலோ, நண்பர்களுடனோ தீவிர கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தால் விதியை நொந்து வாயை மூடி பயணம் செய்து வாகன ஓட்டிகளுக்கு நீதிமன்றத்தின் நடவடிக்கை நம்பிக்கை அளித்தது.

கோர்ட் உத்தரவிட்டு, அரசு வழங்க வேண்டிய நஷ்ட ஈடு சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு சென்று சேர்ந்ததா என்று வெளிப்படையாக தெரியவில்லை. அந்த பெண்ணின் வழக்கு இன்னும் முழுமையாக முடியவில்லை. இந்த நிலையிலே மத்திய, மாநில அரசுகள், நீதிமன்றம் ஆகியவை இணைந்து தங்கள் நிலைப்பாட்டில் இருந்து யூ டேன் அடித்து திரும்பி விட்டது.

இதற்கு அவர்களுக்கு கிடைத்த காரணம் மகாபலிபுரத்தில் சீன அதிபரும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசும் நிகழ்ச்சி.  இவர்களை வரவேற்று, பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டுமாம், இல்லாவிட்டால் அவர்களுக்கு தமிழக அரசு தங்களை வரவேற்பது தெரியாமல் போய்விடும் பாவம். 

அதனால் சீன அதிபர் பல கோடி டாலர் நலத்திட்டங்களை தமிழகத்திற்கு கொடுக்காமல் போய்விடுவார்கள். நஷ்டம் நமக்கும், நம் நாட்டிற்கும் அல்லவா, அதனால் பேனர் வைத்து வரவேற்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை. இவ்வாறு நீதிமன்றத்தில்  அனுமதி கேட்டு மனு செய்யப்படுகிறது. இதை விட கொடுமை அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர் வைத்துக் கொள்ளுங்கள் என்று அனுமதி வேறு அளிக்கிறார்கள்.

பேனர் வைப்பதே பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கி சம்பவத்தை பேச வைப்பதற்குதான். சோ தன் நாவலில் சலுான், டீக்கடையில் நம்ம கட்சியை பற்றி பேசுகிறானா அப்போது நம்ம கட்சிக்கு வெற்றி தான் என்று குறிப்பிட்டு இருப்பார். அதைப் போலவே சாலையின் நடுவே அதிகவேகத்தில் வானத்தில் விரையும் இரு தலைவர்கள் அந்த பேனரை படிக்கவா போகிறார்கள். 

மாப்பிள்ளை ஊர்வலக் கார் செல்லும் வேகத்தில் சென்றால் கூட அதைப் படிக்க முடியாது. இந்த சூழ்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களை  தொந்தரவு செய்யத்தான் இது. அவர்கள் இந்த திட்டம் தொடங்கிய அன்றே காவல்துறை வீடு வீடாக சென்று தொந்தரவு கொடுத்து இரு தலைவர்கள் வருகை மறக்கவே முடியாத படி செய்து இருப்பார்கள். அதனால் அவர்களுக்கும் இந்த பேனர் வீண் செலவுதான்.

சீன அதிபரை வரவேற்க, மாநில அரசு பேனர் வைக்கும் போது அவரையே தங்களின் கட்சியின் கடவுளாக நினைக்கும் இடது சாரிகள் பேனர் வைக்க வேண்டும் அல்லவா, கூட்டணிக் கட்சிக்கடவுள் வரும் போது அதன் தலைவராக இருக்கும், இத்தனைக்கு இடது சாரித் தலைவரின் பெயரை தன் பெயராக தாங்கி நிற்கும் ஸ்டாலின் கட்சி சார்பில் பேனர் வைக்க வேண்டாமா? என்பது போன்ற நியாயம் ததும்பும் கேள்விகள் எழும். நீதிமன்றங்கள் நியாயத்தை உணர்ந்து தீர்ப்பளிக்கும்.

பினனர் இந்த சம்பவமே உதாரணம் ஆக்கப்படும். என் பெண்ணுக்காத்தான் எங்கள் வாழ்க்கையே அவ வயசுக்கு வந்தது தான் எங்களை பொருத்தளவில் உலகின் மிகச்சிறந்த சாதனை அதற்கு எங்கள் வீட்டு வாசல், பஸ் ஸ்டாண்டு, வீதியின் முக்கம் ஆகிய இடங்களில் பேனர் வைக்கிறேன் என்று கிளம்பி வருவார்கள்.

அப்புறம் என்ன ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது போல பேனர் வைக்க தடையும் தீவிரமாக அமல்படுத்தப்படும்.

மற்ற எல்லா சட்டங்களும் நீர்த்துப் போக யார் யாரோ காரணமாக இருந்தார்கள். ஆனால் பேனர் விவகாரத்தில் சட்டம் இயற்றி அதை அமல்படுத்த வேண்டியவர்களும், அதை கண்காணிக்க வேண்டியவர்களும் காரணமாகிவிட்டது காலத்தின் கொடுமை.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP