இடைத்தேர்தல்: உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்!

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
 | 

இடைத்தேர்தல்: உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்!

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி செப்.30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கௌதம சிகாமணி தன் சொந்த செலவில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் விருப்பமனு பெற்றுள்ளார். எனவே, காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி அனந்தன் போட்டியிடலாம் என தெரிகிறது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP