திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல்!!

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி மறைவின் காரணமாக, அவர் எம்.எல்.ஏ வாக உள்ள திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டது
 | 

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆன  தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந் தேதி மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து இத்தகவல் முறைப்படி தலைமை செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கருணாநிதி போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் நேற்று (10-ந் தேதி) அறிவிப்பாணை வெளியிட்டார். இந்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதனையடுத்து, அறிவிப்பாணை வெளியிட்ட  தேதியில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது குறித்த நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் இனி மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP