19 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்... திகிலில் திருப்பரங்குன்றம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு மட்டுமே உறுதியாக இடைத்தேர்தல் நடக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் அடித்து சொல்கிறார்கள்.
 | 

ஆனால், மதுரை  திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மட்டும் தனியாக தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. இத்தொகுதியில் 2016 நவம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக  அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் தொடர்ந்த இவ்வழக்கில், ஜெயலலிதாவின் கைரேகையில் சந்தேகம் இருப்பதால், ஏ.கே.போஸ்  பெற்ற வெற்றி செல்லாது என அறிவித்து, அடுத்ததாக அதிக வாக்குகள் பெற்ற தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

19 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்... திகிலில் திருப்பரங்குன்றம்!

இவ்வழக்கு விசாரணையில் இருக்கிறது. இடைத்தேர்தல் தள்ளிபோனதற்கு  வழக்கு முடிவுக்கு வராததும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. இவ்வழக்கில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வெளியானால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமா என்பதே  பெரும் கேள்விக்குறியாக நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இடைத்தேர்தல் என்றால், 2019 ஜனவரிக்குள் முடிக்க வேண்டும். அதற்கு 40 நாட்களுக்கு முன் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாக வேண்டும்.

19 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்... திகிலில் திருப்பரங்குன்றம்!

எனவே  சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால், 19 தொகுதிகளுக்கு தான் அறிவிப்பு இருக்குமாம். உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு பிறகே திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பற்றி சொல்ல முடியும் என்கிறார்கள். 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP