இடைத்தேர்தல்: திமுக சார்பில் புகழேந்தி போட்டி

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டியிடுவார் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 | 

இடைத்தேர்தல்: திமுக சார்பில் புகழேந்தி போட்டி

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டியிடுவார் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்.21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நேர்காணல் முடிந்ததையடுத்து,  விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நா.புகழேந்தி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. புகழேந்தி (66) 3 முறை விக்கிரவாண்டி ஒன்றிய செயலளராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP