ஸ்டாலின் மீது பாஜக இளைஞரணி புகார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது, பாரதிய ஜனதா யுவ மோட்சா அமைப்பினர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
 | 

ஸ்டாலின் மீது பாஜக இளைஞரணி புகார்

திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் மீது, பாரதிய ஜனதா யுவ மோட்சா அமைப்பினர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.

நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இப்பிரச்சாரத்தின்போது அவர், "ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படியே அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது" எனப் பேசினார்.

இதையடுத்து, பிரதமர் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ள ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜகவின் இளைஞரணியான பாரதிய ஜனதா யுவ மோட்சாவின் நிர்வாகிகள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹுவிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP