கர்நாடகாவைப் போல மற்ற தென் மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும்: தமிழிசை

கர்நாடகாவில் தாமரை மலர்ந்தது போல தென் பகுதியில் உள்ள மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடகாவில் தாமரை மலர்ந்தது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்பார்த்தது போல பாஜக வெற்றி பெற்றுள்ளது. 

மேலும், கர்நாடகாவில் தாமரை மலர்ந்தது போல தென் பகுதியில் உள்ள மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும். 

தமிழ் முதுமையான மொழி என்று அனைவரும் அறிவர். தமிழ் என்றும் உயிர்ப்புடன் வளமையாக இருக்கும். அதை காப்பாற்ற ஸ்டாலின் தேவையில்லை. 

தமிழகத்தில் இந்தியை யாரும் திணிக்கவில்லை; மத்திய அரசுக்கு இந்தியை திணிக்க வேண்டிய அவசியமும் இல்லை" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP