சாட்டையை சுழற்றும் பாஜக தலைவர் அமித் ஷா: தமிழக தளபதியாய் குப்புராமு!    

திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் நபரைத்தான் கட்சியின் மாநில தலைவராக நியமிக்க வேண்டும் என அமிதா ஷாவும் நினைக்கிறாராம். ஏற்கனவே, இது குறித்த நீண்ட விவாதங்கள், ஆலோசனை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளதாகவும், குப்புராமு பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்படும் அறிவிப்பு மேலிட தலைமையிலிருந்து விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

சாட்டையை சுழற்றும் பாஜக தலைவர் அமித் ஷா: தமிழக தளபதியாய் குப்புராமு!    

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் அந்த கட்சி தலைவர் பதவி மட்டுமின்றி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளார். 

கவர்னர் பொறுப்பேற்கும் ஒருவர் எவ்வித அரசியல் கட்சி தொடர்பும் இல்லாதவராக இருக்க வேண்டும் என்பதால் அவர் பொது வாழ்விலிருந்து விலகியுள்ளார். தமிழிசை கட்சியின் மாநில தலைவராக இருந்த போது பிற கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதில் தந்து, கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தார். 

தமிழக சட்ட சபையில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத நிலையிலும், தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியாக பாஜக திகழ்வதில் தமிழிசையின் பங்கு அளப்பரியது. அவரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக கோலோச்சிய திமுக தலைவராக இருந்த கருணாநிதி மற்றும் அதிமுக பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா ஆகியோர் இன்று உயிருடன் இல்லாத நிலையில், தமிழக அரசியலில் வலுவான தலைவருக்கான தேவை ஏற்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், கட்சியின் சித்தாந்தம், கொள்கை பிடிப்பு, துணிச்சலுடன் கூடிய நேர்மை உள்ளிட்ட குணங்கள் அடங்கிய ஒருவரிடம் கட்சியின் மாநில பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என, பாஜக தீவிர விசுவாசிகள் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. 

சாட்டையை சுழற்றும் பாஜக தலைவர் அமித் ஷா: தமிழக தளபதியாய் குப்புராமு!    

தமிழக பாஜகவில் சீனியர்கள் பலர் இருப்பினும், திராவிட கட்சிகளை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் நபர் தேவை என கட்சியின் மேலிட தலைவர் அமித் ஷா விரும்புகிறார். இது குறித்து, மாநில அரசியல் குறித்தும், கட்சி உறுப்பினர்கள், தலைவர்களின் செயல்பாடுகள் குறித்தும் கட்சி தலைமைக்கு ரகசிய அறிக்கை அளிக்கும், குஜராத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர், அமித் ஷாவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 

இது குறித்து, கட்சியின் உள்வட்டார தகவல்கள் கூறியதாவது: அத்வானி, வாஜ்பாய் ஆகியோர் கட்சியின் தலைமை பொறுப்பு வகித்தபோது நடிகர் நம்பியார் மகன், சுகுமார் நம்பியார் கட்சியின் மேலிட தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தார். 

எனினும், அவர் கட்சியில் முக்கிய பொறுப்பு எதையும் வகித்ததில்லை. ஆனால்,கட்சியின் இரண்டாவது ரகசிய உளவுப்பிரிவாகவே அவர் செயல்பட்டார். கட்சியின் மாநில தலைமை அல்லது அதிகாரப்பூர்வ உளவு அமைப்பு எந்த தகவலை கூறினாலும், இரண்டாவது உளவு அமைப்பாக செயல்படும் நபரிடம் அந்த தகவல் குறித்து உறுதி செத்த பிறகே, கட்சி தலைமைக்கு உரிய நடவடிக்கை எடுக்கும். 

அது போலவே, தமிழ் நாட்டில் வசிக்கும் குஜராத்தை சேர்ந்த மிகப்பெரிய வர்த்தகர் ஒருவர், அமித் ஷாவுடன் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அவர்தான் ரகசிய உளவுப்பிரிவாக செயல்படுகிறார். கட்சியின் அடுத்த தமிழக தலைமை நியமனம் குறித்து, அவரிடம் அமித் ஷா கருது கேட்டுள்ளார். 

அதற்கு அவர் அளித்துள்ள பதில், இங்குள்ள பாஜக தலைவர்களை மட்டுமின்றி, எப்படியும் அடுத்த தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற கனவில் உள்ள, திமுகவிற்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., பின்னணி மட்டுமின்றி, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கட்சியின் வளர்ச்சிக்காகவும், கொள்கையாகவும் மட்டுமே உழைத்து வரும் மாநில துணை தலைவர் குப்புராமுவைதான் அந்த நபர் முன்மொழிந்துள்ளாராம். 

அப்படி என்ன சிறப்பு அவரிடம் என அமித் ஷா கேட்டதற்கு, நீங்கள் எதிர்பார்க்கும் துணிச்சலும், நேர்மையும், கொள்கை பிடிப்பும் அவரிடம் உள்ளதாக கூறியதுடன், அதற்கான எடுத்துக்காட்டாக சில சம்பவங்களும் எடுத்துரைத்துள்ளாராம். 

மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் பொது, சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில், ஹிந்துக்களின் புனித சின்னமாக உள்ள ராமர் பலத்தை உடைக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அத்திட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முதலில் மனுதாக்கல் செய்தவர் குப்புராமு.

அவரின் இந்த செயலால் கடுப்பான அப்போதைய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரும், திமுகவை சேர்ந்த மூத்த தலைவருமான டி.ஆர்.பாலு, குப்புராமுவுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்தாராம். ஆனால் அதை கண்டு சற்றும் கலங்காமல், கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த குப்புராமு, பாலுவையே கலங்கடிக்கும் வகையில் பதில் கூறி அனுப்பினாராம். 

இந்த தகவல், அமித் ஷாவை மிகவும் கவர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதே போல், நாடு முழுவதும் உள்ள கருப்பு பணத்தை மீட்கவும், ஊழல்வாதிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மத்திய பாஜக அரசு தீவிரம் காட்ட துவங்கிவிட்டது. 

அதன் ஒரு பகுதியாகத்தான், முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் சிபிஐ பிடியில் சிக்கியுள்ளதும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடப்பதும் எனவும் கூறப்படுகிறது. அதே சமயம், அவருக்கு சொந்த கட்சியான காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சியான திமுக தலைவர்கள் யாருமே ஆதரவு காட்டாததும், அடுத்த அம்பு தங்கள் மேல் பாயுமோ என்ற பயத்தில் தான் எனவும் நம்பப்படுகிறது. 

நிலைமை இப்படி இருக்க, அமலாக்க துறை உதவியுடன் கடந்த ஆட்சிகளில் மிகப்பெரிய ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டவவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராகிவிட்டதாம். மத்திய அரசின் அடுத்த இலக்கே திமுக தான் என்பதால், அவர்கள் அதை சமாளிக்க பாஜக மேலிட தலைவர்களிடம் நெருக்கம் காட்ட முயன்று தங்கள் முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. 

இந்த சூழலில், திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் நபரைத்தான் கட்சியின் மாநில தலைவராக நியமிக்க வேண்டும் என அமிதா ஷாவும் நினைக்கிறாராம். ஏற்கனவே, இது குறித்த நீண்ட விவாதங்கள், ஆலோசனை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளதாகவும், குப்புராமு பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்படும் அறிவிப்பு மேலிட தலைமையிலிருந்து விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சராசரி அரசியல்வாதிகள் போல் இல்லாமல் கட்சிக்காகவும், கொள்கைக்காகவும், ஊழல்வாதிகளுடன் எவ்வித சமரசமும் செய்யாதவருமான ஒருவரைத்தான் அமித் ஷா தேடி வருகிறார். காங்கிரஸின் சிதம்பரத்தை தொடர்ந்து, திமுக தலைவர்கள் மீதும் அமலாக்கத்துறையின் அம்பு எந்த நேரமும் பாயலாம் என்ற சூழல் நிலவுகிறது. 

இந்த நேரத்தில் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்படும் நபர், மத்தியஸ்தம் செய்பவராகவோ, சமரசத்தில் ஈடுபடுபவராகவோ இருக்கக்கூடாது என்பதே, மேலிட தலைமையின் விருப்பமாக உள்ளது. அந்த அடிப்படையில் குப்புராமு அமித் ஷாவின் மனதில் இடம் பிடித்துவிட்டதாகவே, பாஜக உளவுத்துறை உள்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

newstm.in


 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP