பாஜகவுக்கு அடிமையில்லை.. இனி கூட்டணியுமில்லை..! - கொந்தளித்த ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்!

நாடாளுமன்றத் தேர்தலை பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லாமல் அ.தி.மு.க எதிர்கொள்ள இருப்பதை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தெளிவிபடுத்தி இருப்பதாக அ.தி.மு.க பிரமுகர்கள் கூறுகின்றனர்.
 | 

பாஜகவுக்கு அடிமையில்லை.. இனி கூட்டணியுமில்லை..! - கொந்தளித்த ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்!

அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யப்போவதாக பேசியதாக தொடர்ந்த வரும் செய்திகள்தான்  ஹைலைட்டாகி இருக்கிறது.

‘நான் ராஜினாமா செய்யப்போவதாக வரும் செய்தியில் உண்மையில்லை... அது வெறும் கற்பனையானது. அதை நம்ப வேண்டாம்’ என இப்போது மீடியாக்களிடம் மாய்ந்து மாய்ந்து விளக்கமளித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில் செயற்குழு கூட்டத்தில் மற்ற சில விஷயங்களும் பரபரப்பாக பேசப்பட்டுள்ளன. இது குறித்து அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அவர்கள் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள்... ’’முதலில் பேசிய ஓ.பி.எஸ் ’டெல்லியில் நான் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்திக்கப் போனேன். என்னைப் பார்க்காமல் அவமானப்படுத்தி அனுப்பினார்.

பாஜகவுக்கு அடிமையில்லை.. இனி கூட்டணியுமில்லை..! - கொந்தளித்த ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்!

ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க. நாம எந்தச் சூழ்நிலையிலும் பா.ஜ.க-வுக்கு அடிமை இல்லை. ஆனால், எல்லோரும் நாம ஏதோ பா.ஜ.க-வின் அடிமை போலவே பேசிட்டு இருக்காங்க. கட்சிக்கு வழிகாட்டும் குழுவை அமைப்பது அவசியம். விரைவில் அதை அமைப்போம். அதுவரை முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கமும் கே.பி.முனுசாமியும் அந்த வேலைகளைக் கவனிப்பாங்க.

கட்சி தொடர்பான புகார்கள் எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் அவர்களிடம் சொல்லுங்க. அவங்க அதைத் தீர்த்து வைப்பதுடன் எங்க கவனத்துக்கும் கொண்டு வருவாங்க. யார் மீது தவறு இருந்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பேசி முடித்தார்.

பாஜகவுக்கு அடிமையில்லை.. இனி கூட்டணியுமில்லை..! - கொந்தளித்த ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்!

அடுத்து முதல்வர் எடப்பாடியும் பேசினார். ‘மாவட்ட வாரியாக, ஒன்றிய வாரியாக நாம் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொரு ஒன்றியத்திலும் கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்துக்கான பொறுப்பை மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் முன்னின்று செய்ய வேண்டும். அண்ணன் பன்னீர் சொன்னது போல நாம பா.ஜ.க-வுக்கு அடிமை இல்லை.

பாஜகவுக்கு அடிமையில்லை.. இனி கூட்டணியுமில்லை..! - கொந்தளித்த ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்!

அவங்களை நாம எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்க்கிறோம். ஆதரிக்க வேண்டிய நேரத்தில் ஆதரிக்கிறோம் என்பதை நீங்க புரிஞ்சுக்கோங்க... உங்க பிரச்னை எதுவாக இருந்தாலும் சொல்லுங்க. உடனே தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கிறேன்' என்றார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலை பிஜேபி இல்லாமல் எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை அவர்கள் தெளிவாக்கி இருக்கின்றனர்’’ எனக் கூறினர்.

newstm.in

இதைப் படிச்சீங்களா?

பா.ஜ.க-வா? ரஜினி கட்சியா? திசை தெரியாமல் திண்டாடும் கருணாநிதியின் மகன்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP