’பதரான டி.டி.வி.தினகரன்...’ பதறாத அமைச்சர்... அ.தி.மு.க-வில் குபீர்!

விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு,அ.தி.மு.க-வினரை நல்ல நெல்மணியாகவும், டி.டி.வி.தினகரனை பதராகவும் ஒப்பிட்டுப்பிட்டு பேசியதுதான் இப்போது தஞ்சாவூரில் ஹாட் டாபிக்.
 | 

தஞ்சை சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடந்தது. இதில் விவசாயத்துறை அமைச்சரும், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளராஅன் துரைக்கண்ணு பேசினார்.

அப்போது, ‘ தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம். ஆனால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இங்கு இருப்பவர்கள் எல்லோரும் நல்ல நெல்மணிகள், அதாவது அறுவடை செய்த நெல்லை காற்றில் தூத்தினால் அதில் பதர் நெல் போய், நல்ல நெல் மணிகள் மட்டும் கிடைக்கும். அது போல் அதிமுகவில் இருந்து பதர் எல்லாம் போய்விட்டது. நல்ல நெல் மணிகள் மட்டுமே இருக்கிறது.

’பதரான டி.டி.வி.தினகரன்...’ பதறாத அமைச்சர்... அ.தி.மு.க-வில் குபீர்!

பதர் நெல் போனால் நாம் எப்படி கவலை படமாட்டோமோ அதேபோல் போனவர்களை பற்றி நாம் கவலை படக்கூடாது’’ என்றார். அமைச்சரின் பேச்சை கவனித்து கழகத்தினர் என்னய்யா நெல்லு, பதருன்னு பேசுறாரு, ஆளுக்கேற்றவாறுதான் துறையை ஒப்படைத்து இருக்கிறார்கள் எனக் கமெண்ட் அடித்து வருகின்றனர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP