பாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், மதிமுக வின் நிலை ஊசலாட்டத்தில் இருக்கிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகளை ஸ்டாலின் ஒதுக்குவதற்கு பின்னணியில் பாமகவும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
 | 

பாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி

காங்கிரஸ் கூட்டணியில் திமுக இணைவது உறுதியாகிவிட்டது. ஆனால், திமுகவுடன் நட்புக் கட்சிகளாக இருந்த விடுதலை சிறுத்தைகள், மதிமுக -வின் கூட்டணி நிலை  ஊசலாட்டத்தில் இருக்கிறது. 

இந்த நிலையில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளை ஸ்டாலின் சேர்த்துக் கொள்ளாததற்கு பின்னணியில் பாமகவும் இருப்பதாக தெரிவிக்கிறது அறிவாலய வட்டாரம். டெல்லி சென்ற மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி பற்றி பேசுகையில் ராகுல் குறுக்கிட்டு,  'காங்கிரஸ்., கூட்டணியில் இடம் பெற, பா.ம.க., விரும்புகிறது. அக்கட்சியையும் சேர்த்தால், நம் கூட்டணி வலுவானதாக அமையும்' எனக் கூறியிருக்கிறார். பாமக இல்லாமலே நமது கூட்டணி வலுவானது தான்’ என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குறுக்கிட்டு கருத்து தெரிவித்து இருக்கிறார். 
 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், வட மாவட்டங்களில் உள்ள மக்களவை தொகுதிகளில், பா.ம.க., கூட்டணி இன்றி தி.மு.க., - காங்., கூட்டணி, அ.தி.மு.க.,வை விட அதிக சதவீத ஓட்டுகளை பெற்றிருக்கிறது.  எனவே, பா.ம.க.,வை கூட்டணியில் சேர்த்தால், தி.மு.க., - காங்., கூட்டணி அதிக ஓட்டு பெற்ற தொகுதிகளை, அக்கட்சி கேட்கும் எனவும் காரணம் கூறியிருக்கிறார். 

பாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி

இப்படி பாமகவை திமுக ஒதுக்கியதன் பின்னணியில் விடுதலை சிறுத்தைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் நெருங்குவதற்குள் தேவையற்ற கட்சிகளை திமுக அணியில் இருந்து நீக்கிவிட வேண்டும் என திட்டமிட்டிருக்கிறது திமுக. தேவையற்ற கட்சிகள் என அவர்கள் சொல்வது விசிகவையும் மதிமுகவையும்தான். இதற்கு காரணமாக அவர்கள் சொல்வது, வடக்கில் வன்னியர்கள் வாக்குகள் வேண்டும் என்றால், விசிக இல்லாமல் இருப்பதே நல்லது. தலித் வாக்குகளைப் பெறவேண்டுமென்றால் பாமகவும் நம்முடன் இருக்கக் கூடாது. இருவரில் ஒருவரை சேர்த்தால் கூட அது பாதகமாகத்தான் முடியும். கடந்த மக்களவை தேர்தலில் தேர்தலில் மூன்று தனித் தொகுதிகளோடு ஒரு பொதுத்தொகுதி வேண்டும் எனக் கேட்டார் திருமாவளவன்.

பாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி

அவருக்கு ஒரு தொகுதியே அதிகம் என துரைமுருகன் கிண்டலடித்தார். உடனே அண்ணா அறிவாலயத்துக்குத் தொண்டர்களை அனுப்பி வைத்து தீக்குளிப்பு முயற்சிகளை நடத்தினார். இதனால் எரிச்சலான கருணாநிதி, திருவள்ளூர் தொகுதியை சேர்த்துக் கொடுத்தார். அங்கு போட்டியிட்ட ரவிக்குமார் தோற்றுப்போனார்.  

பாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி

இப்போது மீண்டும் அதே 3 தனித்தொகுதி, ஒரு பொதுத் தொகுதி எனக் கேட்பார்கள். எனவே வெற்றிபெற வேண்டிய தொகுதிகளையும் இழந்து பிற தொகுதிகளில் வாக்குகளையும் இழக்க நேரிடும். ஆகவே, பாமக, விடுதலை சிறுத்தைகளை கூட்டணிக்குள் சேர்க்க வேண்டாம்’ என திமுக சீனியர்கள் மு.க.ஸ்டாலினுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். அதனை முழுமையாக உணர்ந்து கொண்டாராம் மு.க.ஸ்டாலின்.  
திமுக கூட்டணியில் இணைய முடியாமல் போனதற்கு ‘ உன்னால் நான் கெட்டேன்.. என்னால் நீ கெட்டாய்..’ என தலையிலடித்துக் கிடக்கிறார்கள் பாமக- விசிக நிர்வாகிகள்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP