asset case against minister rajendra balaji :Intimidate the complainant Police

கோடி கோடியாய் சொத்துக்குவித்த அமைச்சர்... புகார் கொடுத்தவருக்கே ஆப்பு வைக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார்!
 | 

asset case against minister rajendra balaji :Intimidate the complainant Police

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் அருகே தேவதானத்தில் ரூ. 75 லட்சத்துக்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தின் அசல் மதிப்பு ரூ.6 கோடி. அத்துடன் திருத்தங்களில் 2 வீட்டுமனைகளும், நிலங்களும் வாங்கியுள்ளார். தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ள இவர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்கூறி இருந்தார்.

asset case against minister rajendra balaji :Intimidate the complainant Police

மனுவை விசாரித்த நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜி மீதான  சொத்துக்குவிப்பு புகாரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அத்துடன் புகாரை விசாரித்து  வரும் ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருக்கிறது உயர்நீதிமன்றம். புகார் பற்றி விசாரிக்க வேண்டிய லஞ்ச ஒழிப்பு போலீசார்,   மனு அளித்த மகேந்திரனை மிரட்டும் தொனியில் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.  அவரிடம்’ இந்த ஆதாரங்கள் எப்படி கிடைத்தது? தகவல்கள் யார் யார் மூலம் பெறப்பட்டது? எனக் கிடுக்குப்பிடி போடுகிறார்களாம் லஞ்ச ஒழிப்பு போலீசார். asset case against minister rajendra balaji :Intimidate the complainant Police

இது தொடர்பாக மகேந்திரன் தரப்பில் திமுக தலைமைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போக்கை பார்த்துவிட்டு இந்த விஷயத்தில் தலையிட திமுக தரப்பில் தலையிட முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP